https://muthusitharal.wordpress.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/?preview=true
(பகுதி ஒன்றின் சுட்டி)
ஏன் சாதி
இந்த பூட்டிற்கான அவசியமென்ன? ஏன் வர்க்கங்களாக ஒற்றுமையாக இருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். மார்க்ஸியத்தின் வரலாறு எவ்வாறு இயங்கி முன்னகரும் என்பதைக் கொண்டு இதை புரிந்து கொள்ள முயல்கிறேன்.
தொடரும்……
தொடர்ச்சி…..
பேரரசுகளின் தோற்றம்
பேரரசுகளின் உருவாக்கத்திற்கும் சாதியின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. குறுநில அரசுகளாக இருந்தபோது வர்க்கங்களுக்கிடையே போட்டிமனப்பான்மையோ அதன் பொருட்டு விளையும் வேற்றுமைகளோ பெரிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
பேரரசுகள் உருவாகி பேராலயங்கள் எழுப்பட்டபோது சாஸ்திர மற்றும் வேதம் தெரிந்தவர்களின் தேவை அதிகமாகி அவர்களுக்கு முன்னுரிமையும் சலுகைகளும் வழங்கப்பட்டு படிப்படியாக சாஸ்திரம் கற்றவர்களும் புரோகிதர்களும் பொருளாதார அடுக்கில் மேலே செல்கிறார்கள். இயல்பாக இது அனைத்து வர்க்கத்தினரையும் வேத சாஸ்திரங்களை கற்பதை நோக்கி நகர்த்தியது. Java demanda இருக்கும் போது எல்லோரும் Java படிக்கிறதல்லையா. அது போலத்தான.
சமன் குலைவு
இந்நகர்வால் ஒரு காலத்தில் புரோகிதர் வர்க்கம் எண்ணிக்கையில் மிகுந்து பிற தொழில்களைப் புரிபவர்களின் எண்ணிக்கை மிக அருகியிருக்கலாம். இச்சமநிலையைப் பேணுவதற்கு அனைவருக்கும் சமமான ஊதியங்களையோ சலுகைகளையோ பேரரசுகள் அளிக்க விரும்பவில்லையா? இல்லை பேரரசுகளுடன் நெருக்கமாக இருந்த புரோகித வர்க்கம் இதை தடுத்து விட்டதா? என்பதே கேள்வி. எவ்வளவு பொருள் கொடுத்திருந்தாலும் சூத்திரர்களின் வேலையை அவர்கள் செய்திருப்பார்களா என்பதும் கேள்விக்குரியதே.
உலகம் முழுவதுமே பேரரசுகள் உருவாக்கிய பொருளாதாரச் சிக்கலாகத்தான் மார்கஸியம் இதை அணுகுகிறது. பேரரசுகளிலிருந்து முதலாளித்துவம் வரை சமூகம் நகர்ந்ததிற்கு காரணம் இச்சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியால் தான்.
பெரும்பாலும் இச்சிக்கல்களுக்கான தீர்வு ஏதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கங்களுக்கு சாதகமாகவும் மற்ற வர்க்கங்களுக்கு பாதகமாகவும் தான் அமைகிறது. அதுவரைப் பேணப்பட்டு வந்த சமூகநீதி இத்தீர்வுகளால் குலைக்கப்படுகிறது.
கதவடைத்துக் கொள்ளுதல்
அப்படி ஒரு தீர்வாக அமைந்தது தான் புரோகிதர்கள் வேத சாஸ்திரங்கள் தங்களுக்க மட்டுமே உரியவை என்று முடிவெடுத்து தங்களை தனிமைப் படுத்திக்கொண்டது. அது நாள் வரை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து உருவாக்கிய வேதங்களும் சாஸ்திரங்களும், புரோகிதர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் மட்டுமே உரியதானது. பிற வர்க்கத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு சாதியால் பூட்டப்பட்டிருந்த கதவிற்கு வெளியே நிறுத்தப்பட்டு தங்கள் பாட்டன் முப்பாட்டன்களுடைய வேதத்திற்கு அந்நியமாக்கப்பட்டார்கள்.
வேறு வழியின்றி பிறவர்க்கங்களும் (சத்திரியர்களும் வைசியர்களும்) இதைப் பார்த்தொழுகியதின் விளைவு ஒற்றுமையாக இருந்த வர்க்கங்கள் சாதிகளாக சிதறுண்டன. தொழிலை மட்டுமே பிரித்த வர்க்கங்கள் தொழிலாளியை பிரிக்கும் சாதிகளாக உருமாறியது இப்படித்தான்.
சூத்திரர்களின் தொழில்கள் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு, அவற்றை செய்பவர்கள் வேறெந்த தொழிலுக்கும் தகுதியற்றவர்கள் என்ற முத்திரை மிக ஆழமாக உயர்சாதியினரால் பேரரசுகளின் துணைகொண்டு பதிக்கப்பட்டது.
சாதியும் தகுதியும்
காலம் செல்லச் செல்ல பொருளாதார வசதிகளையும், தேவையான அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ளும் ஆற்றல் உயர்சாதியில் பிறந்தவர்களுக்கே உரியதாகியது. இதற்காக சாதிகளும் உருமாறின. பண்டைய காலத்தில் சாதி என்றழைக்கப்பட்டது, நவீன காலத்தில் தகுதி என்று உருமாற்றம் கொண்டது. அதையொட்டி பல போட்டித் தேர்வுகள் உருவாகின. நீட் வரை இதுதான் காரணம்.
இத்தேர்வுகள் தகுதி என்ற பேரில் உரிமை உள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றன என்றார் அம்பேத்கர்.காலம்காலமாக தேவையான தகுதியைப் பெறும் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு சில காலங்களாவது இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்கப்படவேணடும் என்று வாதாடி அதை அரசியலமைப்புச் சட்டமாக்கினார்.
தமிழ்நாட்டில் பெரியாரும் இதைப் பினபற்றி சமூகநீதியை நிலைநாட்ட விரும்பினார். ஆனால் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்த பாடில்லை.
தேவையான தகுதியையும் வளத்தையும் பெற்றுக் கொண்டவர்கள் புதிய உயர்சாதிகளாகத்தான் மாறிப்போனார்கள். பழைய உயர்சாதிகள் இவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள்.
அம்பேத்கரோ பெரியாரோ கனவு கண்ட சமூகநீதி இன்னும் எட்டப்படவில்லை. சாதியின் இறுக்கமான கதவுகள் இப்போது நெகிழ்ந்திருந்தாலும், அக்கதவின் பரப்பு பெரிதாகி இன்னும் எளியோரை அழுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
அரசாங்கங்கள் மட்டுமே இக்கதவை முற்றிலும் கரைத்து விட முடியாது. அக்கதவுகளுக்குப் பின்னால் வசதியாக ஒளிந்து கொண்டிருக்கும் தனிமனிதர்களும் முயல வேண்டும்.
நிறைய கற்பனைகள் உங்கள் பதிவில் ஒரு சான்று கூட இல்லாமல்.
#ஜெமோ எழுதிகிறார், ‘மன்னர்களின் சாதி’ 👉
https://www.jeyamohan.in/35502#.W7ptlLVHaEc
>>பேரரசுகளின் உருவாக்கத்திற்கும் சாதியின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு.
…
>>பேரரசுகள் உருவாகி பேராலயங்கள் எழுப்பட்டபோது சாஸ்திர மற்றும் வேதம் தெரிந்தவர்களின் தேவை அதிகமாகி…
#ஜெமோ 👉 அதாவது மூவேந்தர்கள் குறிப்பிட்ட சாதியினர் அல்ல. அவர்கள் எந்தச்சாதியிலும் இருக்கவில்லை. அவர்கள் தனித்தனி குலவரிசையினர். அக்குலவரிசை அழிக்கப்பட்டபோது அவர்கள் முழுமையாகவே அழிந்தனர்.
பல்லவ பேரரசு பல ஆலயங்களை 6th century -ல் கட்டியது. அப்போ 9th century -ல் வந்த சோழ ஆலயங்களில் கட்டுமானம் வழியாக வருவதற்கு முன்பே 300 வருடங்களுக்கு பல்லவன் வழியாக ‘சாதி’ வந்திருக்க வேண்டும்.
அப்போ, சோழ வம்சம், திராவிடம் எனும் போலியின் கூற்று படியும், உங்கள் கூற்று படியும், ஒரு ‘சத்திரிய சாதி’ வம்சமாக இருக்க வேண்டும்.
ஆனால் மன்னர்கள் சாதி, ‘சத்திரிய சாதி’ கிடையாது என தெளிவாக #ஜெமோ எழுதுகிறார். 9th century to 12th century வரை சோழ ஆட்சி தான். அதன் பிறகு ‘பேரரசு’ கிடையாது தமிழ் நிலத்தில்.
LikeLike
பின்னூட்டத்திற்கு நன்றி. பல்லவர்களை குட்டிப் பேரரசுன்னு வச்சுக்குங்க. எல்லா பார்ப்பன சாதிகளும் மதக்குருமார்கள்(Clan) ஆவதில்லை . அதுபோலத்தான் எல்லா நிலவுடைமைச் சாதிகளும் சத்ரியர்கள்(King) ஆவதில்லை. நாலு வர்ணங்களும் பல்வேறு வகைச் சாதிகளின் தொகுப்பு மட்டுமே. அதுவே ஒரு தனிச்சாதியல்ல.
உங்களுடைய மெனக்கெடலுக்கு நன்றி. தமிழ் தேசியம் என்ற போர்வையை கழற்றி விட்டு உங்கள் நிஜமுகம் காட்டுங்கள். நிறைய கதைக்கலாம்.
LikeLike
பதில் தந்தமைக்கு நன்றி.
>>>நாலு வர்ணங்களும் பல்வேறு வகைச் சாதிகளின் தொகுப்பு மட்டுமே. அதுவே ஒரு தனிச்சாதியல்.
திருப்பி திருப்பி, அடிச்சு விட்டா எப்படி சார் 👉 சாதி-வர்ணம்-முக்குணங்கள் 👉https://www.jeyamohan.in/35524#.W7u8k7VHaEd
>>>அம்பேத்கரோ பெரியாரோ கனவு கண்ட சமூகநீதி இன்னும் எட்டப்படவில்லை
கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட #ஈவேரா வை நிங்கள் உங்கள் blog முழுவதும் தூக்கி பிடிக்கும் போதே, உங்கள், ‘சாதி’ ஆராயச்சி தடம் மாறுகிறது. அவரை திராவிடசுடுகாடு எனும் ஊரில் 95% இடங்களில், ஜெயிலில் அடைத்து வைத்துள்ள அண்ணலோடு ஓப்பிடுவது, காலக்கொடுமை.
‘திராவிடர்/ஆரியர்/திராவிடம்’ என புரட்டு ஓதி, தமிழனை பிச்சையாக்கிய அவரின் கொள்கைகளை, கன்னட மொழி #ஈவேரா வை தமிழர் அல்ல என எதிர்க்கலாமா (or) தன் சொந்த சாதி ஆதரளவாளர் என எதிர்க்கலாமா? https://m.facebook.com/100000485801824/posts/2713000422059458/ 👉 http://dvkperiyar.com/?p=10597
LikeLike
ha..ha..நான் சாதி ஆராய்ச்சியாளன் அல்ல. அதை புரிந்து கொள்ள முயல்பவன். சமீபத்திய பதிவான ‘தலித்தியம்- ஒரு புரிதல்’ என்பதையும் நீங்கள் படிக்கலாம்.
உண்மைதான், திராவிட இயக்கத்தால் தான் நீங்கள் தமிழ் தேசியம் என்ற முகமூடி அணிய வேண்டியிருக்கிறது. சமூகத்தின் கீழடுக்கில் இருந்தவர்களுக்கு பெரியாரின் திராவிட இயக்கத்தால் நன்மை ஏதும் விழையவில்லைதான். அதற்காக அவரால் தமிழகத்திற்கு பயன் எதுவுமேயில்லை என்பது வெறும் வெறுப்பு மட்டுமே.
சாதிய உருவாக்கத்தை மிக வெற்றிகரமாக ஆராய்ந்தவர் அம்பேத்கர் மட்டுமே. அதிகாரத்திற்காக நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்தால் தான் தொழிலின் அடிப்படையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத வர்க்கங்கள், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சாதிகளாக மாற்றப்பட்டது. இந்த விஷயத்தில் நான் நம்புவது அம்பேத்கரை மட்டுமே.
LikeLike
>>>அதற்காக அவரால் தமிழகத்திற்கு பயன் எதுவுமேயில்லை என்பது வெறும் வெறுப்பு மட்டுமே.
கிழஞ்சுது. ஈவேரா வினால், என் 25 acre/பெரிய தேங்காய் தொழில்/கோழி பண்ணை etc வைத்திருக்கும் கவுண்டர் தான் முன்னேறினான் அதுவும் சாராய வியாபாரி ஆரம்பித்த பொறியில் கல்லூரியில் படித்து.
இதை எழுதியதற்காக, அடி/உதை/வசை வாங்கினார் ரவி 👉 https://www.countercurrents.org/dalit-ravikumar020306.htm
அனால் தன் சொந்த சாதியே மிக கடும் பிச்சை நிலையில் இருக்கும் போது, திருமாவே இப்போ திராவிட மாலை போடும் அடிமை நம்பர் 1 👉 https://www.jeyamohan.in/368#.W7078rVHaEc
நேரம் இருந்தால் 👉 https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-s-kelvigalal-oru-velvi-seivom-series-2-248276.html
LikeLike
தமிழ் சோசிய நண்பருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். விடைபெற்றுக் கொள்கிறேன்.
LikeLike