உழைப்பின் கொண்டாட்டம் – Part 1

DSC_6780

புதிதாக ஒரு whatsup groupல் இணைக்கப் பட்டதாக சிணுங்கியது கைப்பேசி. சனிக்கிழமை காலை நேரம். Week endல இன்னுமொரு groupஆ(அக்கப்போரா) என பீதியுடன் கைப்பேசியின் தொடுதிரையை விலக்கினேன். Bus route 9 என்ற பெயர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. Adminஐ தேடி கண்டுபிடித்ததில் பிரேர்னா என்றிருந்தது. நினைத்தது போலவே officeல இருந்து தான் இந்த group உருவாக்கப்பட்டிருந்தது.

 

செய்வன திருந்தச்செய்’ என கடும் சிரத்தையோடு ஒரு குழு இதற்கு பின்னால் உழைத்துக் கொண்டிருப்பது அப்போது தான் எங்களுக்கு உரைக்க ஆரம்பித்தது.திங்களன்று நிகழவிருக்கும் நான் சார்ந்த deptன் வருட முடிவு கொண்டாட்டத்திற்காகத் தான் இத்தனை உழைப்பும். இது போன்ற தன்னார்வலர்களால் தான் ஒட்டு மொத்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டு, நிகழ்வு முடிந்து அனைவரும் பத்திரமாக திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்த போக்குவரத்து ஒருங்கிணைப்பாளருக்கு மானசீகமாய் நன்றி கூறிவிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதென்று முடிவு செய்தேன்.

 

எதிர்பார்ப்பிலேயே அவ்வார இறுதி கடந்து திங்கள் காலையில் வழக்கம் போல் 6மணி அலாரம் மண்டைக்குள் அடித்து எழுப்பியது. கையில் எப்போதுமே காலை மற்றும் மதிய உணவுகளை இழுத்துக் கொண்டு கிளம்பும் நான், வெறும் கையோடு கிளம்பியிருந்தேன். கிட்டத்தட்ட பள்ளிச் சுற்றுலா செல்லும் ஒரு பள்ளிப்  பையனின் மனநிலை தான் அது.

IMG-20171219-WA0023

அலுவலகம் சென்று அங்கிருந்து Tempo travellerல் 10 மணி போல் நிகழ்வு நடைபெறும் Queenslandக்கு சொந்தமான Pleasant days resortக்கு செல்வதாகத் திட்டம். சில மின்னஞ்சல்களுக்கு பதிலளித்து விட்டு மறக்காமல் out of office செட் செய்து விட்டு மணிக்கட்டை நோக்கும்போது மணி 9.45. ஒட்டு மொத்த floorம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்து வெறிச்சோட ஆரம்பித்தது.

அனைவரையும் நிரப்பிக்கொண்டு போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர் லஷ்மி நாராயணன் கண்ணசைக்க, Tempoக்கள்  எரிபொருளைக் குடித்துக் கொண்டே தள்ளாடி உற்சாகம் ததும்ப resortஐ நோக்கி பயணிக்க ஆரம்பித்தன. உள்ளிருக்கும் எங்களுக்கான எரிபொருள் மாலை 4மணிக்குத்தான் கிடைக்கும் என்றார் ஒரு குடிகார குப்பண்ணன் சோகமாக.

IMG-20171218-WA0001

40 நிமிட பயணத்தில் PLEASANT DAYS என்ற பிரமாண்டமான எழுத்துக்களோடு Resortன் முகப்பு எங்களை வரவேற்றது. முகப்பிற்கு ஈடுகட்டும் வகையில் அவ்வளவு பிரமாண்டமாக இல்லாத வரவேற்பரையின் முன் எங்களை இறக்கி விட்டு விட்டு அடுத்த வாடிக்கையாளர்களை நோக்கி ஓட ஆரம்பித்தனர் Tempo ஓட்டுநர்கள். மற்ற அனைத்து Tempoக்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தடைந்தன.

 

வரவேற்பறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் சோம்பி உட்கார்ந்திருந்தது அது ஒரு திங்கள்  கிழமை என்பதை ஞாபகப்படுத்தியது. வரவேற்பறையின் முடிவிலிருந்த படிக்கட்டை நோக்கிச் செல்லுமாறு அங்கிருந்த சிப்பந்தி வழி காட்டினார். அது கீழ்தளம் நோக்கிச் செல்லும் படிக்கட்டு. அதிலிறங்கி செல்லும் போது பக்கவாட்டில் தொடர்ச்சியாக பதிக்கப்பட்டிருந்த ஆடி (கண்ணாடி) களில் பிரதிபலித்த ஒவ்வொருவரின் வெவ்வேறு பிம்பங்களும் கூடவே வந்து குதுகூலப்படுத்தின.

 

IMG-20171218-WA0027

கீழ்தளம் பெரிய வட்டவடிமாக தலையை முட்டும் மேற்கூரையுடன் இருந்து. ஒரு முனையில் பெரிய வெண்திரை ஊதா கலரில் மினுங்கிக் கொண்டிருந்தது. மொத்த அறையும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. 200 பேராவது இருக்கலாம். வழக்கம் போல் அவரவர்களுக்கு மிகத் தெரிந்தவர்களுடன் சிறு சிறு கூட்டமாக அமர்ந்து சலசலத்துக் கொண்டிருந்தார்கள். இதுபோன்ற நிகழவுகள் நடத்தப்படுவதே இதுவரை தெரியாதவர்களைத் தெரிந்து கொள்ளத் தான். இருந்தாலும் பிறர் உதவியின்றி தானாக அது நடப்பதில்லை. இதற்கென்றே அமைப்பு குழுவினர்  (organising commitee) கைவசம் சில வித்தைகள் உள்ளன. ஒன்று, இரண்டு எண்ணச் சொல்லி ஒட்டு மொத்த பேரையும் நான்கு குழுக்களாக பிரித்து விட்டார்கள், Red, Purple, Green மற்றும் Blue என.

IMG-20171219-WA0027

‘சச்சின்….சச்சின்…’ என்று அலறும் கூட்டத்தைப்போல, எதற்கெடுத்தாலும் ‘செந்தில்…..செந்தில்…’ என்றலறிய படு இளமையான purple கூட்டத்தில் நானிருந்தேன்.

 

கையில் மைக்குடன் தொகுப்பாளினிக்குரிய எந்த பந்தாவுமில்லாமல் மிக சாதாரணமாக அங்கிருந்த வெண்திரைக்கு முன் வந்தார் ஸ்பந்தனா. சலசலப்புகள் அடங்கி அறை அமைதியாக ஆரம்பித்தது. தன் இயல்பான பேச்சின் மூலம் ஒட்டுமொத்த கூட்டத்தையும் எளிமையாக கையிலெடுத்துக் கொண்டார் ஸ்பந்தனா. அதற்கு எங்களில் பலர் பண்ணியிருந்த dubmashகளின்  அருமையான காணொளி (video) தொகுப்பும் உதவியது. அந்த காணொளி வெண்திரையில் ஓட ஆரம்பித்ததுமே…சும்மா…தீயாய்ப் பற்றிக் கொண்டது உற்சாகம். சிரிப்பலைகள்  சுவர்களில் மோதி அறை எங்கும் எதிரொலித்தது.

 

இதே உற்சாகத்தை தக்கவைக்கவேண்டிய பொறுப்பு தொகுப்பாளருக்குரிய அனைத்து பந்தாக்களுடனும் தோன்றிய அரவிந்தின் தலையில் சுமத்தப்பட்டது. அநாசயமாக ஊதித்தள்ளிவிட்டார் தள்ளி… மிகையில்லாத அளவான உடல்மொழி, நேர்ந்தியான ஆங்கில உச்சரிப்பு, அருமையான நகைச்சுவை உணர்வென ஒட்டுமொத்த கூட்டத்தையும் கையிலெடுத்துக் கொண்டது, அவர் இத்துறையில் ஒரு நிபுணர் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

IMG-20171219-WA0020

அவர் நடத்திய அனைத்து விளையாட்டுகளுமே குழுசார்ந்தவை. மிகக் குறிப்பாக அந்த படம் வரைந்து குறிப்புணர்த்தும் போட்டி அத்தனை பேரையும் அந்த சிறிய வரைபலகையின் முன் கூடச்செய்து தள்ளுமுள்ளாட வைத்தது. கிட்டத்தட்ட ஒரு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது அவ்வறை. அனைத்துப் போட்டிகளிலும் கில்லியாக வென்றது இளமையும் ஆற்றலும் ததும்பி வழிந்த purple அணி தான்.

IMG-20171219-WA0029

இழந்த ஆற்றலை திரும்ப பெற்றுக்கொள்ள மதியம் 1.30 மணி அளவில்  உணவு பவ்யமான சிப்பந்திகளால் பரிமாறப்பட்டது. வழக்கம் போல் பிரியாணி மற்றும் அது சார்ந்த அயிட்டங்கள் தான். ஆனால், சுவை குறையில்லாமல் இருந்தது. உணவு சாப்பிடும் போதே வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டும் போல் தோன்றியது. உயரம் குறைந்த அவ்வறையில் அனைவரின் மூச்சுக்காற்றும் வெளியேற வழியின்றி தவிப்பதைப் போல் ஒரு உணர்வு.

 

உணவு முடித்து அடுத்த நிகழ்வுக்கான இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் தான் அந்த resortன் பசுமையும் பிரமாண்டமும் ஆச்சரியப்பட வைத்தன. நிறைய பேர் அதில் மயங்கி உறைந்து நின்று கொண்டிருந்தார்கள் தங்கள் கைபேசியின் முன். அவர்களுக்கான புதிய முகப்பு புகைப்படம் (profile picture) தயாராகிக் கொண்டிருந்தது.

IMG-20171219-WA0019

இதற்குப்பின் அந்த பரந்த புல்வெளியில் கருமேகங்கள் சூழ அங்கு நடந்தவை எல்லாம் அலாதியானவை. குறிப்பாக அந்த புல்வெளிமேல் செயற்கையாக  உருவாக்கப்பட்டிருந்த ஆட்ட தளத்தில் (dance floor) நிரோஷாவால் பிள்ளையார் சுழி போடப்பட்ட  உடம்பின் அசைவின்    எல்லைகளை உணரவைக்கும்  அல்லது அந்த எல்லைகளை மறுவரையறை (extending the limitations of your body) செய்த அந்த  ஆட்டம்….

 

தொடரும்…

தொடர்ச்சி…..

https://muthusitharal.wordpress.com/2017/12/22/உழைப்பின்-கொண்டாட்டம்-part-2/?preview=true…
 

Advertisement

8 thoughts on “உழைப்பின் கொண்டாட்டம் – Part 1”

  1. அருமை முத்து 👌👌, அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s