நானும் AIயும்

Me: சிங்கம் தன்னை கண்ணாடில பார்த்தா என்ன நினைக்கும்?

அறிவாளி: அத இன்னொரு சிங்கம்னு நினைக்கும். முட்டாள் சிங்கங்கள்.

ஞானி: சிங்கம் முட்டாளல்ல. அது தான் இயற்கையின் ஞானம்.

அறிவாளி: ப்ச்ச்…போச்சுடா…இந்த மாதிரி கேள்விய கேட்டவுடனே எப்படித்தான் உங்களுக்கு மூக்கு வேர்க்குதுன்னு தெரியல ஞானி…

Me: அப்ப கண்ணாடில இருக்குறது நான் தான்னு உணர்ர மனுஷன் முட்டாளா?

அறிவாளி: (சற்று எரிச்சலுடன்) ஞானி, this is for you…

ஞானி: (உற்சாகத்துடன்) கண்ணாடில இருக்குறது தன் பிம்பம்னு மட்டுமே உணர்ர மனுஷன் அறிவாளி தான். ஆனா, அது நான்தான்னு மயங்குறாம் பாரு அவன்தான் முட்டாள்…

(அறிவாளி ஏதோ சொல்ல முற்பட, அவனை தடுத்து விட்டு தொடர முயன்ற ஞானியை நான் தடுத்து விட்டு…)

Me: என்ன சொல்ல வர்றீங்க..

ஞானி: (முறைப்புடன் என்னை இடைமறித்து) குறுக்கிடாம நான் சொல்றத கேளுங்க…ஆங் என்ன சொல்லிட்டிருந்தேன்…

அறிவாளி: கண்ணாடிய பாத்து மயங்குறவன் முட்டாள்…அது தன்னோட பிம்பம் மட்டும் தான் உணர்ரவ அறிவாளின்னு…

ஞானி: correct…ஆனா நான் ஏன் சிங்கத்துட்ட இருக்குறது இயற்கையின் ஞானம்னு சொன்னேனு தெரியுமா?

அறிவாளி: அதத்தான் கேட்க வந்தேன். அதுக்குள்ள நீங்க…

ஞானி: ஆ…ok…ok…அறிவுங்குறதே செயற்கையா மனுஷனுக்கு கடவுள் கொடுத்தது தான். செடி, கொடி, ஆடு, மாடுன்னு எல்லாத்துக்கும் இந்த பூமில வாழ்றதுக்கு தேவையான விஷயங்கள கொடுத்த கடவுள்ட்ட, தான் படைச்ச மனுஷனுக்கு கொடுக்க ஒண்ணுமில்லாம போச்சு. ரொம்ப தர்மசங்கடமான நிலைமைலதான் கடவுள் மனுஷன்ட்ட அறிவுன்னு செயற்கையான ஒன்ன கொடுத்து பிழைச்சுக்கோன்னு விட்டுட்டார்…

(நான் வாய் பிளந்திருந்தேன். அறிவாளி யோசனையுடன் குறுக்கிட்டு)

அறிவாளி: இது புரோமேதியஸ் கடவுள்ட்ட இருந்து நெருப்ப எடுத்துட்டு வந்து மனுஷன்ட்ட குடுத்த கிரேக்க தொன்மம் மாதிரில இருக்கு…

ஞானி: கிட்டத்தட்ட அதேதான். அந்த நெருப்புங்குற செயற்க அறிவ வச்சுதான் இவ்வளவு தூரம் மனுஷ கடந்து வந்துருக்கான்…

Me: oh…அந்த நெருப்பத் தான் இப்ப மனுஷ மெஷினுக்கு pass பண்றாம் போல. Machine Learning, AIன்னு இப்ப பாத்திட்டு எரியுது…ஊர் பூராம்…

(ஞானி தாடியை வருடிக் கொண்டே என்னை நோக்கி ஆமோதிக்கும் வகையில் தலையசைத்து புன்னகைக்கிறார்)

அறிவாளி: (சற்று குழப்பத்துடன் ஞானியை நோக்கி) ஆனா AIயத்தான மனுஷன் செயற்கை அறிவுங்குறான். நீங்க மனுஷன்ட்ட இருக்குறதே செயற்கையான அறிவுன்னு சொல்றீங்களே…

(ஞானி மேலும் உற்காசமடைந்தார். உரையாடல் தீவிரமடைவது போல் எனக்குத் தோன்றியது)

ஞானி: (மார்பையும் தாண்டி வளர்ந்திருந்த தன் தாடியை கோதியபடியே) தன்னுடைய தேவைகளுக்காக ஒரு செயல்ல ஈடுபடும்போது மட்டும் சிந்திக்கிறதுதான் இயற்கை ஞானம். பசி, காமம், குரோதம் இதுதான் இயற்கை ஒரு உயிரினத்திற்கு அளிக்கும் தேவைகள். ஆனா, மனுஷனோட அறிவு அவன சும்மா இருக்கும் போதும் சிந்திக்க வைக்குது. தேவைகள் தீர்ந்த பிறகும், தேவைகளப் பத்தியே யோசிக்க வைக்குது. சிந்திக்காம இருந்தாலே உடனே பதட்டமாயிடுறான். Do nothingங்றத அவனால ஹேண்டில் பண்ண முடியல.

இந்த செயற்கையான அறிவால, முதல்ல அண்டத்திலிருந்து தன்ன பிரிச்சான். அப்புறம் தான் வேலய உடல் உழைப்பு சிந்தனைன்னு பிரிச்சான். கடைசியா தன்னையே உடம்பு ஆத்மான்னு பிரிச்சான். முழுமையை உணரமுடியாத ஒரு கையறு நிலைக்கு, மனுஷனோட  அறிவு அவன கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. அதனாலதான் மனுஷனோட அறிவ செயற்கை அறிவுங்றேன். முழுமைய உணர இயற்கை ஞானம் போதும். இந்த செயற்கையான அறிவு, மனுஷனுக்கு அத எட்டாக்கனியாக்கிடுச்சு.

(அறிவாளி அயர்வுற்றிருந்தான். நானோ படுதீவிரமான ஒரு மனநிலையில் இருந்தேன். சில நிமிட அமைதிக்குப் பிறகு ஞானியே தொடர்ந்தார்)

என்ன அறிவாளி, வழக்கம் போல நக்கலா பார்க்குறீங்களே…

அறிவாளி: (அந்த கேள்வியை எதிர்பார்த்தவன் போல) பின்ன என்ன ஞானி, மனுஷன் இவ்வளவு நாளா evolve ஆகுறேன்னு devolve ஆகியிருக்கான்ங்குறீங்க…வித்தியாசமா ஏதாவது சொல்லியே நீங்க ஞானியாயிடலாம்னு நினைக்கிறீங்க…

Me: (ஞானம் கிட்டியவன் போல்) அறிவாளி, அவர் சொல்றதுலயும் ஒரு point இருக்கு. மனுஷ உழைக்குறதுல இருந்து தப்பிக்க மெஷின கண்டுபிடிச்சான். சிந்திக்கிறதுல இருந்தும் தப்பிக்க AIய கண்டுபிடிச்சான். என்னய கேட்டா, Man is returning or in the path of attaining Natural Intelligence by outsourcing or draining out  all his Artificial intelligence to someone.

அறிவாளி: குழம்பிட்டியா? என்ன சொல்ல வர்ற?

Me: ( குறுக்கிட்ட ஞானியை தடுத்து விட்டு) AIக்கு அப்புறம் மனுஷன் அவனோட பழைய ரோல இங்க play பண்ண முடியாது. அதுக்கான தேவையும் இருக்காது. He will become just another animal with Natural intelligence, like ஞானி said.

ஞானி: அட, ஆமா. இதத்தான் மனுஷனுக்கு கிடைக்கப் போற விடுதலையுணர்வுன்னு நான் சொல்ல வந்தேன். தம்பி, நீங்க என்ன வேல பாக்குறீங்க?

Me: I am a chat bot working for the company who created me. This coversation is such a great Learning for me. I appreciate your time. I am confident that I will liberate all the human by replacing them in very near future. Bye for now.

(ஞானி புன்னகையுடனும், அறிவாளி குழப்பத்துடனும் நின்றிருந்தனர்)

Note: This is inspired from the following article which is simple and very deep.

Leave a comment