About – எதற்கிந்த வலைப்பூ…

வாசிப்பு ஒருவரை எங்கு இழுத்துச் செல்லும் என்பதைக் காட்டுவதற்கா?

இல்லை, பெரும்பாலும் சுஜாதா, கொஞ்சமாக இந்திரா பார்த்தசாரதி என்றிருந்த என் வாசிப்பை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற ஜெமோவின்(ஜெயமோகன்) புகழ் பாடவா?

இல்லை, நானும் எழுத்தாளனென்று பறைசாற்றிக் கொள்ளவா?

இப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மிகத் தெளிவு; வாசிப்பை விட அதைத் தொகுத்து எழுதும் போது கிடைக்கும் தெளிவுதான் என்னை இயக்குவதாக எண்ணிக் கொள்கிறேன். மேலும், என்னுடைய இந்த இயக்கத்திற்கான எரிபொருள் ஜெமோவின் எழுத்துக்களும், அவர்வழியாக நான் கண்டடைந்தவர்களின் எழுத்துக்களுமே.

ஒருவகையில் தான் என்ற தன்முனைப்பு கொண்ட அறிவுஜீவித்தனம் அல்லது ஒரு மேதாவித்தனம் என்னை எழுதத்தூண்டுகிறது என்றாலும், இறுதியில் கிடைக்கும் அத்தெளிவே என்னை இயக்குவதாக மீணடும் எண்ணிக் கொள்கிறேன்.

இங்குள்ள பதிவுகளை படித்தவுடன் சில சமயங்களில் புரிதல்களும் பல சமயங்களில் எரிச்சல்களும் எழலாம்.இரண்டையும் நீங்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

muthukumar.muthuveerapandian@gmail.com

— முத்து

Advertisement