மணிபல்லவம்

ஜெயவர்த்தனே (னா?) அவர்களுடைய காலத்தில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு, முள்ளிவாய்க்கால் தினங்களில் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி நினைக்கும் பொதுச் சமூகத்தில் ஒருவன் நான்.  ஈழத்தோடு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத ஒருவனின் இயல்பு அதுவாகத்தான் இருக்க முடியும். ,  ஒரு ரயிலில் பயணிக்கும் போது கூடவே வந்து மறைந்து போகும் காட்சிகளாகத்தான் ஈழம் எனக்கு பரிட்சயம். தமிழகத்தில் இருப்பதால் தான் இந்தப் பரிட்சயமும் கூட. ஆனால், இந்தப் படுகொலைகளின் அல்லது துயர அனுபவங்களின்  நேர் அல்லது… Continue reading மணிபல்லவம்

தெய்யமும் மாடன் மோட்சமும்

இது என்ன நடனம் அல்லது கூத்து என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த அறிவை அதட்டி உஷ்…என்றது பெண்ணின் அழுத்தத்தையும், ஆணின் பலகீனத்தையும் கலந்தொலித்த அந்த ஆணின் குரல். முகத்திலிருந்த வெண்தாடியின் பிரகாசத்தை விஞ்சும் ஒடுங்கிய முகமாய்த் தொலைவில் தெரிந்தார் அக்குரலின் சொந்தக்காரர். நடனம் முடியும் வரை, அறிவின் தவிப்பை அறியாமல் பார்த்துக்கொண்ட அக்குரல் நிகழ்வு முடிந்து சில நாட்களுக்குப் பிறகும் எங்கோ தொலைவில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்நடன நிகழ்வு… Continue reading தெய்யமும் மாடன் மோட்சமும்

Bonito – ஒரு ஆச்சரியங்களின் தொகுப்பு

கண்ணணும். கௌரி சங்கரும் கையில் இரவுணவிற்கான அனுமதிச் சீட்டோடு வீட்டிற்கு வந்தது, ஒரு இனிய திகைப்பாய் இருந்தது. அவர்களிடமிருந்த ஒரு கனிவும், கூச்சமும் கூட இத்திகைப்பிற்கான காரணமாய் இருக்கலாம். புதிதாய் குடி புகுந்திருந்த இடத்தின் புதுவருடக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் இருப்பவர்கள் இருவரும். தன்னார்வலர்களால் செய்யப்படும் காரியங்கள் எப்போதுமே ஒரு உன்னதத்தை தொட முயற்சிப்பவை. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக வந்து இச்சீட்டை கொடுக்க வேண்டும் என்பது அந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான். My entire family is… Continue reading Bonito – ஒரு ஆச்சரியங்களின் தொகுப்பு

சத்தியமும் வன்முறையும்

காந்தியினுடைய Holy Trinity என அவருடைய சுயராஜ்யம், தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் மற்றும் சத்தியசோதனை என்ற மூன்று புத்தகங்களையும் குறிப்பிடுவார்கள். காந்திய ஆர்வலரும், காந்தியைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், தன்னுடைய நாளைய காந்தி என்ற புத்தகத்தில் இம்மூன்று புத்தகங்களைப் பற்றிய ஒரு கச்சிதமான குறிப்பைத் தந்திருப்பார். இந்திய சுயராஜ்யத்தை காந்தியுடைய அரசியலின் தத்துவ வடிவமென்றால், அதன் செயல்வடிவம் தான் தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் என்று உருவகிக்கிறார். சுயராஜ்யம் ஒரு அறிவுஜீவியினுடையது என்றால், சத்யாகிரகம் ஒரு… Continue reading சத்தியமும் வன்முறையும்

ஆறு தாரகைகள்

இசையும், சிகரெட்டும் இந்த நாவல் முழுதும் கிரங்கிக் கிடக்கிறது. ஒன்று காற்றுடன் இயைந்து ஒலியாகிறது; மற்றொன்று காற்றுடன் புகைவிட்டு விளையாடுகிறது. புகைப்பதற்கும், இசைப்பதற்கும் ஏதோ ஒரு ஒற்றுமை அல்லது ஒவ்வாமை இருப்பதை உள்ளூர உணரமுடிகிறது. இன்னதுதான் என்று வரையறுக்க முடியவில்லை. ஜோத்ஸ்னாவையும், கிருஷ்ணனையும் பிணைத்திருப்பது இவ்விரண்டும் தான். இவர்களிருவருக்குமிடையை நடக்கும் உரையாடலாக விரியும் இந்த நாவல் இருவருக்கும் இந்துஸ்தானி இசையின் மேல் இருக்கும் பற்றையும், ரசனையையும், மேதமையையும் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறது. ஆனால், கிருஷ்ணனிடம் இருக்கும் இலக்கிய ரசனையும்,… Continue reading ஆறு தாரகைகள்

அறிவும் உண்மையும்

சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் எப்போதும் இடைவெளி உண்டு என்பதை தத்துவங்களின் உளறல் என்று அன்றாடம் அல்லது உலகியல் விலக்கி வைத்து விடக்கூடும். ஒரு சொல் அதன் பொருளை எட்டுவதற்கு, ஒருவருடைய சமூக அமைப்பு, அனுபவம், அறிவு என்றவற்றால் ஆன ஒரு conduit வழியாக பயணிக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் இந்த இடைவெளி ஒரு புத்தகத்தாளின் இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள உணரமுடியாத இடைவெளி; பல நேரங்களில், இது புத்தகத்தின் முதல் தாளுக்கும் கடைசித் தாளுக்கும் இடையே… Continue reading அறிவும் உண்மையும்

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

காலை நடையில் திடீரென நம்முன் முளைத்தெழுந்திருக்கும் செடி நம்மை திகைக்க வைப்பதில்லை. ஆனால், திடீரென அங்கு அமர்ந்திருக்கும் ஒரு குரங்கு ஒரு பதட்டத்தை உருவாக்கத்தான் செய்கிறது. இது எங்கிருந்து வந்தது என்ற ஒரு திகைப்பு ஒரு புறம் என்றால், அது வந்த பாதையை அறிய முயல்வதற்கான இயலாமை இன்னொரு புறம். காலை நடையின் போது வெகு தொலைவில் இக்குரங்கு வந்து கொண்டிருப்பதை கவனிக்கும் வாய்ப்பு நமக்கிருந்திருந்தால் இந்த திகைப்பு இருப்பதில்லை. கிட்டத்தட்ட நவீனம் என்று நமக்கு முன்… Continue reading ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

யாக்கை நாவல் பற்றி

சிலவற்றை அல்லது இந்நாவலில் சித்தரிக்கப்படும் சுப்பு (சுப்ரமணியன்) போன்றவர்களின் மனநிலையை, ஏற்கனவே நமக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடிவதில்லை. கலையை, தர்க்கத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள முடியாது என்பதும் நிதர்சனம் தான். இந்த கலைமனத்தின் நிறைவின்மையின் ஊற்றுக்கண் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் தர்க்கபுத்தி இயங்கும். சுப்புவின் துயர் மிகுந்த பால்யமும், அங்கிருந்து அவனுக்கு கிடைக்கும் சமூகம் மற்றும் பாலியல் பற்றிய புரிதல்களும் இந்நாவலில் சித்தரிக்கப்படும் விதம் அலாதியானது. வாசகர்களை இயல்பாக… Continue reading யாக்கை நாவல் பற்றி

சுதந்திரமும் அரசாங்கமும்

சில புத்தகங்கள், திடீரென இதுவரையிலான வாசிப்பை, அதன் வழி அடைந்த சில புரிதல்களை உடனடியாக தொகுத்து கொள்ள வேண்டிய அவசியத்தை அல்லது நிர்பந்தத்தை ஏற்படுத்தும். எஸ்.நீலகண்டன் அவர்களின் இப்புத்தகம் பொருளியல் என்பது அறிவியல் மற்றும் பிற அறிவுத்துறைகள் போல நவீன யுகத்தின் கண்டுபிடிப்பு என்ற பொதுப்புரிதலை இல்லாமலாக்குகிறது. வரவு செலவுகளை துல்லியமாக கணக்கிட உதவும் Double entry book keeping system (வரவும் செலவும் should net to zero என்ற Accountingன் பாலபாடம்)  நவீன யுகத்திற்கு… Continue reading சுதந்திரமும் அரசாங்கமும்

What went wrong with CAPITALISM

எதற்கு இந்த புத்தகத்தை எடுத்தேன் என்பதை தோராயமாக மட்டுமே சொல்ல முடியும். முதலாளித்துவம் சரிவை நோக்கிச் செல்கிறது என்ற Narrative சமீப காலமாக Grand Narrative ஆக மாற ஆரம்பித்ததால் இருக்கலாம். 'What Went Wrong with CAPITALISM' என்ற தலைப்பு இயல்பாகவை இப்புத்தகத்தை வாங்க வைத்தது. இதை எழுதியவரைப் பற்றி பிறகுதான் google செய்து தெரிந்து கொண்டேன். Ruchir Sharma's profile also compelled me to take this book. https://ruchirsharma.com/ இன்னமும் புத்தகத்திற்குள்ளேயே… Continue reading What went wrong with CAPITALISM