
எதற்கு இந்த புத்தகத்தை எடுத்தேன் என்பதை தோராயமாக மட்டுமே சொல்ல முடியும். முதலாளித்துவம் சரிவை நோக்கிச் செல்கிறது என்ற Narrative சமீப காலமாக Grand Narrative ஆக மாற ஆரம்பித்ததால் இருக்கலாம். ‘What Went Wrong with CAPITALISM’ என்ற தலைப்பு இயல்பாகவை இப்புத்தகத்தை வாங்க வைத்தது. இதை எழுதியவரைப் பற்றி பிறகுதான் google செய்து தெரிந்து கொண்டேன். Ruchir Sharma’s profile also compelled me to take this book.
Home
இன்னமும் புத்தகத்திற்குள்ளேயே செல்லவில்லை. 25 பக்க முன்னுரையில் (prologue and introduction) தரப்படும் ஒரு சித்திரம், இது நிபுணர்களுக்காக மட்டும் எழுதப்பட்ட புத்தகமல்ல என்ற உணர்வைத் தருகிறது. முதலாளித்துவத்தின் இயங்கு தளத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்த நிபுணர்களுக்கும் இப்புத்தகம் நிறைய வழங்கும் என்றே தோன்றுகிறது.
‘The era of smaller or shrinking
government is over’ என்று உலகத்தின் அறிவஜீவிகள் முழங்க ஆரம்பித்திருக்கும் வேளையில், ‘when did they shrunk’ என கேட்கிறார் Ruchi Sharma. ரீகன், தாட்சர் காலத்தில் ஆரம்பித்த இந்த முதலாளித்துவ புரட்சி, முதலாளித்துவத்தை சுதந்திரமாக செயல்பட வைத்தது போல் பாவனை மட்டுமே செய்தது என்கிறார். இவர்களின் அரசாங்கம் எப்போதுமே தன் எல்லைகளை சுருக்கி கொண்டதில்லை என்கிறார். Welfare state என்று ஆரம்பித்து, அது மக்களுக்காக பெரும் நிறுவனங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றுவது (Bail out) வரை நீண்டிருக்கிறது என்கிறார். இது Zombie Corporateகளை உருவாக்கியது என்கிறார். முதலாளித்துவத்தின் அடிநாதமான Creative Destructionஐ இந்த Bail out கலாச்சாரம் முடக்கி விட்டது என்கிறார். இதன் விளைவே தற்போதைய உலகத்தின் மந்த தன்மைக்கு (less productive) காரணம் என்கிறார். மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் இது தான் காரணம் என்கிறார்.
mmm…Interesting isn’t it? அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே சந்தையை முழு சுதந்திரத்துடன் செயல்பட விடாமல் தவிர்த்தன என்பது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் இதற்கு அரசாங்கங்களை மட்டுமே குறை கூறவில்லை இப்புத்தகம். பெருவாரியான மக்களும் இந்த bail out கலாச்சாரத்தைத் தான் விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறது. Easy way out…
The economic problems in a Capitalist country are not created by Capitalism, but by its Government’s intrusion
– Ayan Rand
கிட்டத்தட்ட Ruchir Sharmaவும் இதைத்தான் கூற வருகிறார். Government’s must shrink in a Capitalistic Societly. Will this lead to Karl Marx dream of ‘No Government at all’ ?
வர்க்க பேதமற்ற கம்யூனிச சமூகங்களில் அரசு தானாக உதிரும் அல்லது தேவையற்றுப் போகும்
– Karl Marx
Will be an enriching read…