மணிபல்லவம்

ஜெயவர்த்தனே (னா?) அவர்களுடைய காலத்தில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு, முள்ளிவாய்க்கால் தினங்களில் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி நினைக்கும் பொதுச் சமூகத்தில் ஒருவன் நான்.  ஈழத்தோடு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத ஒருவனின் இயல்பு அதுவாகத்தான் இருக்க முடியும். ,  ஒரு ரயிலில் பயணிக்கும் போது கூடவே வந்து மறைந்து போகும் காட்சிகளாகத்தான் ஈழம் எனக்கு பரிட்சயம். தமிழகத்தில் இருப்பதால் தான் இந்தப் பரிட்சயமும் கூட. ஆனால், இந்தப் படுகொலைகளின் அல்லது துயர அனுபவங்களின்  நேர் அல்லது… Continue reading மணிபல்லவம்

தெய்யமும் மாடன் மோட்சமும்

இது என்ன நடனம் அல்லது கூத்து என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த அறிவை அதட்டி உஷ்…என்றது பெண்ணின் அழுத்தத்தையும், ஆணின் பலகீனத்தையும் கலந்தொலித்த அந்த ஆணின் குரல். முகத்திலிருந்த வெண்தாடியின் பிரகாசத்தை விஞ்சும் ஒடுங்கிய முகமாய்த் தொலைவில் தெரிந்தார் அக்குரலின் சொந்தக்காரர். நடனம் முடியும் வரை, அறிவின் தவிப்பை அறியாமல் பார்த்துக்கொண்ட அக்குரல் நிகழ்வு முடிந்து சில நாட்களுக்குப் பிறகும் எங்கோ தொலைவில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்நடன நிகழ்வு… Continue reading தெய்யமும் மாடன் மோட்சமும்

Bonito – ஒரு ஆச்சரியங்களின் தொகுப்பு

கண்ணணும். கௌரி சங்கரும் கையில் இரவுணவிற்கான அனுமதிச் சீட்டோடு வீட்டிற்கு வந்தது, ஒரு இனிய திகைப்பாய் இருந்தது. அவர்களிடமிருந்த ஒரு கனிவும், கூச்சமும் கூட இத்திகைப்பிற்கான காரணமாய் இருக்கலாம். புதிதாய் குடி புகுந்திருந்த இடத்தின் புதுவருடக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் இருப்பவர்கள் இருவரும். தன்னார்வலர்களால் செய்யப்படும் காரியங்கள் எப்போதுமே ஒரு உன்னதத்தை தொட முயற்சிப்பவை. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக வந்து இச்சீட்டை கொடுக்க வேண்டும் என்பது அந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான். My entire family is… Continue reading Bonito – ஒரு ஆச்சரியங்களின் தொகுப்பு