சாய்வாக ராஜாஜி கூடத்தின் படிக்கட்டுகளில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது அந்த கண்ணாடிப்பேழை. தனக்கேயுரிய அழகோடு அந்த கறுப்புக் கண்ணாடி மலர்ந்து உறைந்திருக்கும் இந்த சூரியனின் கண்களை திகைப்போடும் துயரோடும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. தோளில் எப்போதுமிருக்கும் மஞ்சளாடை அந்த சூரியன் உதிக்கும் மலை போன்ற தோள்களை அதே காதலுடன் ஆரத்தழுவியிருக்கிறது. தமிழ்த்தாயின் மூத்தமகனை மார்பிலிருந்து கால்வரை போத்தியிருக்கிறது தேசியக் கொடி. சுவாசித்திருக்கும் போது அனைத்து தலைவர்களுக்கும் ஒன்றுதான். சுவாசம் நிற்கும்போதுதான் அத்தலைவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியவருகிறது.… Continue reading காலியான கண்ணாடிப்பேழை
மழைமாலைப் பொழுது
பக்கவாட்டில், பளிச்...பளிச்..என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களை துளைத்து வெட்டிச் சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரசாலைத் திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளை போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டியது அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாழாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த, சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், தோளில் சாய்ந்திருந்த மனைவியின்… Continue reading மழைமாலைப் பொழுது
‘காலா’- இராவண வதம்
இராவணனுக்கு மட்டுமா பத்து தலை. ஆசையிலிருந்து பேராசையென; அகந்தையிலிருந்து ஆணவமென; பொன்னாசையிலிருந்து பெண்ணாசையென; அடைக்கலத்திலிருந்து ஆதிக்கமென; தனியுடைமையிலிருந்து தனக்கு மட்டுமேயென முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது நம்மைத் தளைப்படுத்தும் நம்முடைய தலைகள். யுத்த களத்தில் இராவணனின் தலைகள் ஒவ்வொன்றாக கொய்யப்படும் பொழுது, பற்று அற்றவனென, எளியவனென, பொதுவுடைமைவாதியென மிளிர ஆரம்பிக்கின்றான் இராவணன். தன்னைத் தளைப்படுத்திய அனைத்து தலைகளையும் களைந்து பொன்னொளி வீசுகிறது எஞ்சியிருக்கும் அவனுடய முகம். குழந்தையின் முகம். அது குழந்தையின் அகமும் கூட. இப்படித்தான்… Continue reading ‘காலா’- இராவண வதம்
குமரகுரபன்-விஷ்ணுபுரம் விருது விழா
என்னால் மறக்க முடியாத நிகழ்வின் ஒராண்டு நிறைவிது. போன வருட ‘குமரகுருபன் - விஷ்ணுபுரம்’ விழாவில்தான் என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகனை( ஜெமோ) முதன் முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இடைப்பட்ட இந்த ஓராண்டில் அவரைச் சந்திக்க கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும், அந்த முதல் சந்திப்பு பற்றிய நினைவுகளை வருடிச் செல்ல தவறுவதில்லை. போனமுறை சபரிநாதனுக்கு; இம்முறை கண்டராதித்தனுக்கு என, சிறந்த கவிஞருக்கான விருது வழங்கும் இவ்விழா தன் இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளது. கடும் உழைப்பைக்கோரும் இவ்விரு… Continue reading குமரகுரபன்-விஷ்ணுபுரம் விருது விழா
நடிகையர் திலகம்
ஒளிப்பதிவாளர் உயர் நாற்காலியில் அமர்ந்தவாறு, ஒளிபடப்பிடிப்புக் கருவியின் பின்னால் தயாராகிக் கொண்டிருக்கிறார். இயக்குநர் இறுகிய முகத்துடன் நம்பிக்கையே இல்லாமல் “ஸ்டார்ட்...ரெடி...ஆக்சன்” என்றவுடன் திரையில் காண்பிக்கப்படும் நடிகை ஒரு வட்டமான மஞ்சத்தில் அமர்ந்தவாரே அதிலிருக்கும் தலையணை நோக்கி பக்கவாட்டில் சரிகிறார். மிக உயர்ந்த மேற்கூரையில் இருந்து தொங்கும் திரைச்சீலை அந்த வட்ட மஞ்சத்தைத் தழுவி, காற்றிலசைந்து அந்த நடிகையையும் தழுவத் துடிக்கிறது. அத்துடிப்பு, தன்னிடமிருந்து பிரிந்து சென்ற காதலனையோ கணவனையோ நினைவுபடுத்த, அதுவரை இறுகியிருந்த நடிகையின் முகம் நெகிழத்… Continue reading நடிகையர் திலகம்
கிரிக்கெட் வர்ணனை
“நீண்ட தப்படிகள் ஓடிவந்து அதிவேகத்தில் நல்ல அளவில் வீசப்பட்ட பந்து. அதை பின்னால் சென்று தடுத்தாடினார் மட்டையாளர். பந்தை பந்துவீச்சாளரே தடுத்தெடுக்க ஓட்டத்திற்கான வாய்ப்பெதுவுமில்லை. அணியின் எண்ணிக்கையில் மாற்றமேதுமில்லை. 2 விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்கள். மீண்டும் பட்டாபிராம் முனையிலிருந்து கோர்ட்னி வால்ஸ், சுனில் கவாஸ்கரை நோக்கி…” ஒவ்வொரு நொடியும் நம்மை பந்தோடே பயணிக்க வைக்கும் கிரிக்கெட் பற்றிய வானொலி வர்ணனை இது. தொலைக்காட்சிப் பெட்டிகள் பிரபலமாகாத காலத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் உற்ற தோழன் இந்த வானொலி… Continue reading கிரிக்கெட் வர்ணனை
தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ் குரல்
அன்றாடங்களில் சிக்கிக் கொள்ளாத ரஷ்ய இலக்கிய ஆளுமையான தஸ்தயெவ்ஸ்கியை மிகவும் பிரபலபடுத்தியுள்ளது அவரின் தமிழ்குரலான எம்.ஏ. சுசீலா அவர்களை கௌரவிக்கும் பொருட்டு விக்ஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் (எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர் குழு) சென்னை ரக்ஷ்ய கலசார மையமும் இணைந்து நடத்திய விழா. விழாவை தலைமை தாங்கியவர்களில் ஒருவரான திரு. மிஹாயில் கோர்பட்டேவ் ஆச்சரியபட்டதைப்போல, ரஷ்யர்களுக்கே சிக்கலான தஸ்தயெவ்ஸ்கி எனும் புதிரை, தன் மொழி ஆளுமையாலும், கடின உழைப்பாலும் அவிழ்த்திருக்கும் எம்.ஏ.சுசீலா அவர்களைக் கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.… Continue reading தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ் குரல்
நிலவறை குறிப்புகள்
காலம் கடந்தும் நம்மால் ரசிக்கப்படும் படைப்புக்களையே செவ்வியல் (Classic) படைப்பென்கிறார்கள். கலைஞரின் உதிரத்திலிருந்து சிந்திய எழுத்துக்களைப் பருகி தன் உடல்மொழி வழியாக நமக்குக் கடத்திய சிவாஜியின் பராசக்தியை இப்போதும் அதே பரவசத்துடன் பார்க்க முடிகிறது. மானுடத்தின் என்றுமிருக்கும் சிக்கல்களைப் பேசும் அனைத்து படைப்புகளும், காலப்போக்கில் செவ்வியல் படைப்புகளாக உருமாறுகின்றன. பெரும்பாலான ரஷ்ய இலக்கியங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. ‘நிலவறைக் குறிப்புகள்’ என்ற அப்படியொரு வகையான நாவலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. 1800களில் வாழ்ந்த பிரசித்திபெற்ற நாவலாசிரியரான பியோதர்… Continue reading நிலவறை குறிப்புகள்
தெய்வங்களும் பாவங்களும்
உடலில் ஊறிக்கொண்டிருக்கும் சாமி எறும்பின் உணர்வைத் தருபவை இயக்குநர் விக்ரமனின் படங்கள். வன்முறை என்றால் அந்த சாமி எறும்பு கடிக்கும் அளவுக்குத்தான் இருக்கும். பெரும்பாலும் நல்லுணர்வுகளான பாசம் ,மரியாதை, பொறுப்புணர்வு, பொறாமை கொள்ளாமை என அனைத்தையும் கலவையாக்கி சிமெண்ட் போல நம்மேல் பூசியனுப்புவார். 90களின் இளைஞர்களிடம் நேர்மறை எண்ணங்களை விதைத்து அவர்களின் ஆளுமையை செதுக்கிய அக்கறையுள்ள இயக்குநர். இப்படிப்பட்ட படங்களின் தேவைகள் இப்போது குறைந்து விட்டனவா என்ன? இப்போதுள்ள பெரும்பாலான படங்கள் “நீ பச்சை தமிளேண்டா ஷேர்… Continue reading தெய்வங்களும் பாவங்களும்
Blockchain – ஒரு நம்பிக்கைப் புரட்சி
“வங்கிகள் மறைந்து நேர்மையானவர்களே தனி வங்கிகளாவார்கள்.” “நிலப்பதிவு அலுவலங்கள் மறைந்து நேர்மையானவர்களே தனி நிலப்பதிவாளர்களாவார்கள்” இப்படி ஆரம்பித்து நீண்டு கொண்டே போகிறது, கூடிய விரைவில் காணாமல் போகக்கூடியவைகளின் பட்டியல். நம்பிக்கையாக பரிவர்த்தனைகளை நம்மிடையே நிகழ்த்திக்கொள்ள நாம் ஏற்படுத்திக் கொண்ட அனைத்து பெரு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் என்னால் கரைத்து இல்லாமலாக்கி விட முடியுமென்று மார்தட்டி நிற்கிறது வளர்ந்து வரும் புது தொழில்நுட்பமான 'Blockchain '. இணையத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல் இது என்கிறார்கள் வல்லுநர்கள். இணையம் தகவலை பரவலாக்கியதென்றால், Blockchain… Continue reading Blockchain – ஒரு நம்பிக்கைப் புரட்சி









