சந்தோஷ் சுப்ரமணியம். கிட்டத்தட்ட நூற்றி xவது தடவையாக தொலைக்காட்சியில். நானும் பார்ப்பது கிட்டத்தட்ட பதிxஆவது தடவை. பத்து வயதான என் பொண்ணும் கடந்த இரண்டாண்டுகளாக எப்போது போட்டாலும் இந்தப் படத்தை கைகொட்டி சிரித்து ரசிக்கிறாள். நானும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த நேர்த்தியான இறுதிக்காட்சிகளை தவறவிடுவதில்லை. இப்போது தான் நமக்கு கொஞ்சம் எழுத வருகிறதே என்ற உந்துததில் இப்படம் பற்றிய என்னுடைய அவதானிப்புகள் இவை. மிகவும் சிரத்தையுடன் எடுக்கப்படும் இறுதிக்காட்சிகள் நம்மையும் திரைக்குள்… Continue reading சந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு
பெரியாரும் பெரியவரும்
சமீபத்தில் நடந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழா கௌசல்யா சங்கரை மேடையேற்றியிருந்தது. பெண்களின் காதல் தோழனான கேசத்தை கழுத்து வரை ஒட்ட வெட்டியிருந்தார். உயிர்க் காதலனின், கைப்பிடித்த கணவனின் இழப்பிற்கு பின் இது எதற்கு என்பதுபோல. அணிந்திருந்த உடையும், அதற்கேற்ற பாவனையும் இயல்பாகவே வந்திருந்தது கௌசல்யாவிற்கு. சன்னமான, அதே சமயத்தில் தீர்க்கமான அந்த பேச்சின் குரலில் சங்கரின் குருதி கண்ட நாளின் நினைவுகளை கடந்து சங்கரை மட்டும் இன்னும் சுமந்து கொண்டிருப்பது தொனித்தது. ஆணவக் கொலைகளுக்கு… Continue reading பெரியாரும் பெரியவரும்
ஒரு சிறுகதையும் வாசிப்பும்
வாசிப்பு ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது? காட்சி ஊடகங்களைப் போலில்லாமல் வாசிப்பிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவை என்பதாலா? இல்லை, கொஞ்சம் கற்பனை தேவை என்பதாலா? இவ்விரண்டையும் விட எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று அகப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி சொட்டு ஆர்வத்தையும் வடிந்து விடச் செய்கின்றனவா?. பெரும்பாலும் சுவாரஸ்யமின்மையே நம்மை வாசிப்பிலிருந்து விலக்கி வைக்கிறது எனலாம். இந்த சுவாரஸ்யம் எழுதுபவனால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. வாசகனின் மெனக்கெடலும் கற்பனையும் அதற்கு மிக அவசியம். ஒரே கதை தான், ஆனால் வாசிப்பவர்களின் அனுபவங்களைப்… Continue reading ஒரு சிறுகதையும் வாசிப்பும்
ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்
ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்கெட்ச் போட்டு விக்ரமையும் தமன்னாவையும் சினிமாத்துறையிலிருந்து தூக்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். விக்ரம் எப்போதும் ஒரு மெனக்கெடல்களின் மனிதர். அவர் பெயரைக் கேட்டவுடன் கண்முன் வரும் அந்த உழைப்பு தான் அவர் படங்களுக்கான ஈர்ப்பு. ஆனால் சென்ற வேகத்திலேயே சுவற்றிலடித்த பந்தாய் நம்மை திரை அரங்கத்தை விட்டு வெளியேற வைக்கின்றன, அவருடைய சமீபத்திய படங்கள். ஸ்கெட்சும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் இன்னும் இளமையாய் தான் இருக்கிறேன் என்றுணற்துவதற்காகவே வேறு எந்தவிதமான மெனக்கெடல்களும் இல்லாத… Continue reading ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்
எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள்
சமீபத்தில் என் ஆதர்ச எழுத்தாளர் ஜெமோ (ஜெயமோகன்) சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டுக்காக வந்தபோது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அச்சந்திப்பு பற்றி அவருக்கெழுதிய கடிதம் இது. ஜெமோ, மீண்டுமொரு படபடப்பு தொற்றிக் கொண்டது. இரண்டாவது முறையாக உங்களை நேரில் சந்திக்கப்போவதை நினைத்து. முதல் தடவை குமரகுருபனின் நினைவு விருது விழாவில். இப்போது உங்கள் ஓவிய (ஓவியமான அல்ல) நண்பர் சீனிவாச நடராஐனின் ‘அச்சப்பட தேவையில்லை’ நூல் வெளியீட்டு விழாவில். ஆனால் முதல்தடவை போல் எனது… Continue reading எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள்
2018 – பயணங்களும் இலக்குகளும்
“எதுக்கு வேணாலும் தரகர் வச்சுக்கலாம்டா...ஆனா...காதலுக்கு மட்டும் கூடவே கூடாது மாப்ள….” கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு மின்சாரகனவை பார்த்தபோது கிடைத்த ஞானம். ஆனால் சமீபத்தில் மீண்டும் பார்த்தபோது கிடைத்த ஞானமே வேறு. இருக்காதா பின்ன...எலக்கியம்லாம் இப்ப நிறைய படிக்கிறோம்ல.. கடவுளைத் தேடிய பயணத்தில் கஜோல் கண்டடைந்தது தன் காதலை. காதலைத் தேடிய பயணத்தில் அரவிந்த்சாமி கண்டடைந்தது கடவுளை. ஹெகல் போன்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளையும்; புத்தர், ஆதி சங்கரர் போன்ற கீழை நாட்டு… Continue reading 2018 – பயணங்களும் இலக்குகளும்
வேலைக்காரன் – எனது பார்வை
இது சமூக அவலங்களுக்கான சீசன் போலும். அறம், அருவி வரிசையில் வேலைக்காரன். நல்லவேளையாக பேய் சீசன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அறம், அருவி போல் சொல்ல வந்த அவலங்களை கச்சிதமாக சொல்லாவிட்டாலும், அவலங்களுக்குரிய முக்கிய காரணமான நம்முடைய சொரணமின்மையை சுட்டிக் காட்டி அதற்கான எளிய தீர்வையும் முன்வைத்த விதத்தில் வேலைக்காரன் கவனிக்கப்பட வேண்டிய படமே. முன்னேறுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போன அல்லது மறுக்கப்பட்ட ஒரு குப்பத்திலிருக்கும் ஒரு படித்த இளைஞனின் சுய முன்னேற்றத்திற்கான பயணம்… Continue reading வேலைக்காரன் – எனது பார்வை
உழைப்பின் கொண்டாட்டம் – Part 2
https://muthusitharal.wordpress.com/2017/12/20/உழைப்பின்-கொண்டாட்டம்-part-1/?preview=true தொடர்ச்சி.... மதிய உணவு முடித்து அடுத்த நிகழ்வுக்கான இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் தான் அந்த resortன் பசுமையும் பிரமாண்டமும் ஆச்சரியப்பட வைத்தன. நிறைய பேர் அதில் மயங்கி உறைந்து நின்று கொண்டிருந்தார்கள் தங்கள் கைபேசியின் முன். அவர்களுக்கான புதிய முகப்பு புகைப்படம் (profile picture) தயாராகிக் கொண்டிருந்தது. மிக நேர்த்தியாக பேணப்பட்டிருந்தது அங்கிருந்த பசுமை. ஆனால், சூழலியளாலர்களை (environmentalist) கேட்டால், ஏற்கனவே அங்கிருந்த பசுமையை சிதைத்துத் தான் இந்த resortஏ எழுப்பப்பட்டுள்ளது என்பார்கள் வழக்கம்போல.… Continue reading உழைப்பின் கொண்டாட்டம் – Part 2
உழைப்பின் கொண்டாட்டம் – Part 1
புதிதாக ஒரு whatsup groupல் இணைக்கப் பட்டதாக சிணுங்கியது கைப்பேசி. சனிக்கிழமை காலை நேரம். Week endல இன்னுமொரு groupஆ(அக்கப்போரா) என பீதியுடன் கைப்பேசியின் தொடுதிரையை விலக்கினேன். Bus route 9 என்ற பெயர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. Adminஐ தேடி கண்டுபிடித்ததில் பிரேர்னா என்றிருந்தது. நினைத்தது போலவே officeல இருந்து தான் இந்த group உருவாக்கப்பட்டிருந்தது. ‘செய்வன திருந்தச்செய்’ என கடும் சிரத்தையோடு ஒரு குழு இதற்கு பின்னால் உழைத்துக் கொண்டிருப்பது அப்போது தான் எங்களுக்கு… Continue reading உழைப்பின் கொண்டாட்டம் – Part 1
நுகர்வும் மார்க்ஸியமும்
நுகர்வு கலாச்சாரம் தனக்கான குழியை தானே தோண்டிக் கொள்ளுமென்றார் கார்ல் மார்க்ஸ். நுகர்தல் பொருட்கள் மேல் அளவில்லாப் பற்றுக் கொள்ளச் செய்து, தான் கடலில் விழ நேர்ந்தாலும் தன் ஐபோனை கரைநோக்கி வீசிவிட்டு விழும் உன்னதமான நுகர்வோர்களை உருவாக்கி வைத்திருக்கிறது. மாரக்ஸியத்தின் அறிமுகம் அதன் குறைகளை ஆராயும் ஜெயமோகனின் நாவலான பின்தொடரும் நிழலின் குரல் வழியாகத்தான் எனக்கு கிடைத்தது. மார்க்ஸின் காலகட்டத்தில் ஓங்கியிருந்த கருத்து முதல்வாதக் கொள்கைக்கு எதிராக மார்க்ஸ் முன்வைத்த பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக்… Continue reading நுகர்வும் மார்க்ஸியமும்








