நானும் AIயும்

Me: சிங்கம் தன்னை கண்ணாடில பார்த்தா என்ன நினைக்கும்? அறிவாளி: அத இன்னொரு சிங்கம்னு நினைக்கும். முட்டாள் சிங்கங்கள். ஞானி: சிங்கம் முட்டாளல்ல. அது தான் இயற்கையின் ஞானம். அறிவாளி: ப்ச்ச்…போச்சுடா…இந்த மாதிரி கேள்விய கேட்டவுடனே எப்படித்தான் உங்களுக்கு மூக்கு வேர்க்குதுன்னு தெரியல ஞானி… Me: அப்ப கண்ணாடில இருக்குறது நான் தான்னு உணர்ர மனுஷன் முட்டாளா? அறிவாளி: (சற்று எரிச்சலுடன்) ஞானி, this is for you… ஞானி: (உற்சாகத்துடன்) கண்ணாடில இருக்குறது தன் பிம்பம்னு… Continue reading நானும் AIயும்

இருத்தலியமும் மார்க்ஸியமும்

சமூகம் என்பது கற்பனை அல்லது கும்பல் என்பதை உன்னதப்படுத்தும் ஒரு வார்த்தை என்பது சற்று திடுக்கிட வைக்கிறது. கீர்க்கேகார்ட் (Søren Kierkegaard, A Danish Philosopher 1813-55 )  மனிதர்களை கும்பல் என்றே உருவகிக்கிறார். இக்கும்பலால், அதன் பகுதியான தனிமனிதன் எந்த விதத்திலும் பாதிப்படைவதில்லை அல்லது தன்னை வரையறுத்துக் கொள்ள முடியாது என்கிறார். கிட்டத்தட்ட தனிமனித மனம் அல்லது ஆன்மா அல்லது அகம் மட்டுமே உள்ளது. இவ்வகத்திற்கும் புறத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை அல்லது அகம் புறத்தாலும் கட்டமைக்கப்படுகிறது… Continue reading இருத்தலியமும் மார்க்ஸியமும்

கொடைமடம் – அறமும் திறமையும்

தனக்கென உடைமை எதுவும் சேகரிக்க முடியாதவர்களை அல்லது அதற்கான வாய்ப்பு வழங்கப்படாததால் உடமைகளற்று இருப்பவர்களை பாட்டாளி வர்க்கம் என்று வரையறுத்துக் கொண்டால், தனக்கென உடைமை எதுவும் தேவையற்றவர்களை முதலாளி என்பதா? பாட்டாளி என்பதா? இவ்விரு வர்க்கங்களிலிருந்தும் அவர்கள் தோன்ற முடியும். புத்தர் நம்மை வசீகரிப்பது போல பாட்டாளி வர்க்கத்திலிருந்து எழும் உடைமைகள் எதுவும் தேவையில்லை எனும் புத்தர்கள் நம்மை வசீகரிப்பதில்லை. இல்லாதவன் துறப்பதற்கு என்னவிருக்கிறது என்பதாலா?பிளேட்டோ, இவர்களைப் போன்ற தேவைகளற்றவர்கள் அல்லது தன்னிறைவு கொண்டவர்கள் தான் தத்துவஞானிகளாக… Continue reading கொடைமடம் – அறமும் திறமையும்

கிருமி – It is not toxic

Fantastic indeed... படகை செலுத்துபவரின் கையைத் தேடிக் கண்டடைய முடியாமல், அவருடைய துடுப்பின் அசைவிற்கு ஒத்திசைவாக தலை மட்டும் அசைந்து செல்வதை காண்பதாக வரும் சித்தரிப்பு திகிலூட்டுகிறது. கடல் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த இணையரில் ஒருவரான அவரது தலையைத் தவிர, உடலின் அனைத்துப் பாகங்களிலும் தன்னை வலுவாக நிறுவிக் கொண்டிருக்கிறது அப்பூஞ்சை நோய். தங்களிடம் எஞ்சியிருந்த படகின் துணைகொண்டு ஆள்அரவமற்ற ஒரு தீவில் நீண்ட நாட்களாக இந்நோயின் துணையுடன் தங்கள் முடிவை நோக்கி… Continue reading கிருமி – It is not toxic

ரமணிகுளம் – சென்னையின் பசுமை

நவீன அல்லது சமகால மாற்றங்கள், ஒரே சமயத்தில் வளர்ச்சியாகவும், சிதைவாகவும் வெவ்வேறு தரப்பினரால் அவதானிக்கப்படுகின்றன. அதனால்தான் என்னவோ, மாற்றங்கள் எப்போதும் வளர்சிதை மாற்றங்கள் என்று உருவகிக்கப் படுகின்றன போலும். சிதைவாக மட்டுமே உணர்பவர்கள் பெரும்பாலும், அச்சிதைவை விரும்பாத அல்லது அதனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர் கொள்ள முடியாத முதியவர்கள். இவர்களை பழமை விரும்பிகள் என்றும் கூட உருவகிக்கலாம். மாற்றங்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தை காவு கொள்ளும் எனில் அச்சிதைவிற்கு பண்பாட்டு என்ற உரிச்சொல்லை வல்லமை இருந்தால் இவர்களால் அளிக்க… Continue reading ரமணிகுளம் – சென்னையின் பசுமை

மாற்றுமெய்மையும் மெய்மையும்

புதுமைப்பித்தன், சொ.விருத்தாசலம் என்ற பெயரில் எழுதிய (🙂) கட்டுரைகளில் சிலவற்றை நீண்ட நேரத்திற்கு வாசிக்க வேண்டியிருந்தது. இரண்டு அல்லது மூன்று பக்கங்களே அத்தனை நீண்டதாக இருந்தது எனக்கு. ஒரு புனைவாளுமை, அவ்வாளுமையாக உருவாகி வந்ததை அவர்களுடைய இலக்கியம் சார்ந்த கட்டுரைகளே வெளிப்படுத்துகின்றன. கற்பனைச் சிறகுகளுக்கு முற்றிலுமாக ஓய்வளித்து விட்டு, சிறிதளவு ஊகங்களுடன் பெரும் தர்க்கங்களுடன் நிலத்தில் காலூண்டி நிற்பவை இக்கட்டுரைகள். இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கடவுளுக்கு அடுத்த இடத்தில் கலைஞனை பொறுத்திப் பார்க்கிறார் புதுமைப்பித்தன். கலை பொய்தான், மனிதர்கள்… Continue reading மாற்றுமெய்மையும் மெய்மையும்

திருவருட்செல்வியும் யோவானும்

யோவான் தரமான காண்டம் தான வச்சிருக்க என இமானுவலிடம் இருக்கும் காண்டம்களை உறுதி செய்து கொள்ளும் தெளிவை அவள் சற்றுமுன் இமானுவலுடன் சேர்ந்தமர்ந்து பருகிய பியரால் குலைத்து விட முடியவில்லை. குழப்பமெல்லாம், இமானுவலுக்குத் தான். உடனே சாட்சி என்கின்ற இந்நெடுங்கதை, இம்மானுவலை புறத்தில் வார்ப்பெடுத்திருக்கும் அவனுடய சகோதரனான யோவானை நோக்கி நகர்கிறது.அகத்தே இமானுவலின் எதிர்முனையான யோவான் தன்னுள் ஒடுங்கிய ஒருவன். இதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது இமானுவலின் ஒழுக்கமின்மைக்காக தன் தந்தையால் தான் தண்டிக்கபட்டதாகக் கூட இருக்கலாம்.… Continue reading திருவருட்செல்வியும் யோவானும்

வாஜ்பாயி – சேற்றில் முளைத்த செந்தாமரை

சில வருடங்களுக்கு முன்பு படித்த, நரசிம்மராவ் அவர்கள் பற்றிய புத்தகம்தான், வாஜ்பாயி பற்றிய இந்தப் புத்தகத்தை ஏதேச்சையாக Odyseeyல் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது.  ராமசந்திர குகாவின் The finest biography of an Indian prine minister that I have read என்ற பரிந்துரையும் இப்புத்தகத்தின் முகப்பட்டையிலேயே இருந்தது. நரசிம்மராவின் வாழ்க்கை (அரசியல்) பற்றி எழுதியிருந்த வினய் சீதாபதி பற்றி எதுவும் நான் அறிந்திருக்க வில்லை. இப்புத்தகத்தை எழுதிய அபிஷேக் சவுத்திரி பற்றியும் தான். அப்புத்தகத்தை… Continue reading வாஜ்பாயி – சேற்றில் முளைத்த செந்தாமரை

வனவாசி

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டின் பசுமையைத் தவிர வேறெதுவுமில்லாத சமவெளிக் காட்டில் இருந்தது அந்த ஜமீன் பங்களா. அங்குள்ள பசுமையால் அறுபடாத பௌர்ணமி நிலவின் முழுத்தோற்றத்தை அந்த பங்களாவின் ஜன்னலின் வழியாக தழுவலாம் என்று தோன்றும். மேலும் ஆள் அரவமற்ற அந்த சமவெளியில் அந்த பௌர்ணமி இரவில் குதிரையின் மேலமர்ந்து பயணிக்கும் ஒரு நகரவாசியின் மனநிலை…வனவாசி என்ற பிரசித்தி பெற்ற வங்காள நாவலில் (விபூதிபூஷணின் ஆரண்யக, தமிழில் த.நா.சேனாபதி) வரும் இக் காட்சிகள் ஒரு நகரவாசிக்கு அளிக்கும்… Continue reading வனவாசி

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டின் பசுமையைத் தவிர வேறெதுவுமில்லாத சமவெளிக் காட்டில் இருந்தது அந்த ஜமீன் பங்களா. அங்குள்ள பசுமையால் அறுபடாத பௌர்ணமி நிலவின் முழுத்தோற்றத்தை அந்த பங்களாவின் ஜன்னலின் வழியாக தழுவலாம் என்று தோன்றும். மேலும் ஆள் அரவமற்ற அந்த சமவெளியில் அந்த பௌர்ணமி இரவில் குதிரையின் மேலமர்ந்து பயணிக்கும் ஒரு நகரவாசியின் மனநிலை…வனவாசி என்ற பிரசித்தி பெற்ற வங்காள நாவலில் (விபூதிபூஷணின் ஆரண்யக) வரும் இக் காட்சிகள் ஒரு நகரவாசிக்கு அளிக்கும் கண நேர… Continue reading ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்