அஞ்சலி

கலைந்து போயிருந்த குருவிக் கூடுபோல பாழடைந்து போயிருக்கும் கேசம். ஆனால், தனக்குள் இன்னும் எத்தனை குருவியை வேண்டுமானாலும் குடிவைக்கும் ஆற்றலும், ஆசையும் இருக்கிறது என்பதுபோல் அக்குழந்தையின் தலையிலிருந்து எழும்பிக் குதித்து தோள்களில் புரண்டோடியது. மன வளர்ச்சி குன்றியவர்களை பராமரிக்கும் ஒரு காப்பகத்தின் தோட்டத்தில் தன் அடர்ந்த கேசத்தை அங்குமிங்கும் ஆட்டி தன்னுடைய பயிற்சியாளருடன் ஒரு விளையாட்டில் ஆத்மார்த்தமாக தன்னை பிணைத்திருந்தாள் அஞ்சலி. "Mrs. Sekar, அப்ப நீங்க ஒரு complicated cesarian operationக்கு அப்புறம் ரொம்ப  weakஆ… Continue reading அஞ்சலி

கொங்கைத் தீயும் கொற்றவையும்

தனக்கு பிறர் போற்றும் அழகிருந்தும் அதை உணர்ந்து ஆராதிக்க முடியாத அல்லது அதற்கு தேவையற்ற அப்பெண்ணின் மேல் படர்கிறான் கலாரசிகனான அவளுடைய கணவன். முழு நிலவு போன்ற அவளின் முகத்தில் எச்சலனமும் இல்லை.  கொஞ்சம் எரிச்சலாகி, தன் பார்வையை அவளுடைய முகத்திலிருந்து விலக்கி, புடைத்திருக்கும் கழுத்து, தன்னை அவள்மேல் முழுமையாக படரவிடமால் தடுத்திருக்கும் விம்மிய மார்பு, என உடலின் அனைத்துப் பகுதிகளையும் நோக்குகிறான். செலுமையான அனைத்துப் பகுதிகளும், அவளுடைய முகத்தைப் போலவே சலனமற்று இருப்பதாய் பிரமை கொள்கிறான்.… Continue reading கொங்கைத் தீயும் கொற்றவையும்

புரட்சியும் உலக மறுப்பும்

சமீபத்தில் பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடந்திருந்த 40 கி.மீ மரத்தான் போட்டியை முழுமையாக ஓடி முடித்திருந்த நண்பர், அங்கு வாழும் மனிதர்களின் கவலையும், மகிழ்ச்சியுமற்ற  முகங்களைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தார். ஆரோவில்லைச் சுற்றி பரபரத்துக் கொண்டிருக்கும் மனித அலைகளின் தாக்கமேதுமின்றி, இயங்கும் வட்டத்தின் இயக்கமற்ற மையப்புள்ளி போல் அவர்களிருப்பது தான் ஓடி முடித்ததைவிட சாதனையாக அவருக்குத் தோன்றியது. உடனே, உலக மறுப்பில் விழைந்த    அவர்களுடைய பொறுப்பற்றத் தன்மையை சுட்டிக்காட்ட விரும்பியது என்னுடைய மார்க்சிய மேதாவித்தனம். தமிழ் மார்க்சியர்களான… Continue reading புரட்சியும் உலக மறுப்பும்

முதல் இலக்கிய மேடை

ராஜ் கௌதமனில் தொடங்கிய  மார்க்சிய ஆய்வுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அபுனைவு கட்டுரைகளின் வாசிப்பு,  ந.முத்து மோகன், தேவிபிரசாத் சட்டோபாத்யா என பயணித்து ஆ. சிவசுப்ரமணியம், ராஜேந்திர சோழன், வெங்கடாசலபதி என நீண்டு கொண்டே போய்க் கொண்டிருந்தது. அறிவார்ந்த சமூகங்களால் தவிர்க்கவேப் படமுடியாத இவ்வாளுமைகள்  அனைவரும் எனக்கு அறிமுகமானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் வெவ்வேறு முக்கிய நிகழ்வுகளின் வழியாகத்தான். கிட்டத்தட்ட, இவ்வாசிப்பு புனைவிலிருந்து என்னை வெகுவாக விலக்கி வைத்திருந்தது. ஜெயமோகனின் கிராதம் மட்டுமே இந்த ஓராண்டில் என்னுடன் பயணித்த… Continue reading முதல் இலக்கிய மேடை

பாசமும் அகங்காரமும்

தங்களுடைய 'மினி'யாக திரும்பி தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கும் மகளை, தங்கையை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் கனவிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்ததுபோல் முழித்துக் கொண்டிருக்கிறது ஒட்டு மொத்த குடும்பமும்.  சில தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மினியை வெறுப்பின் உச்சத்தில் உமிழ்ந்து விட்டு வந்திருந்த அவளுடைய மூன்று அண்ணன்களும், 'அவன வெட்டுடா….' என்று தூக்கத்தில் அலறிக் கொண்டு எழுந்து அட மினி இங்க நிக்கறா… அப்ப..அப்போ... அதெல்லாம் கனவா... என்ற பாவனையுடன்… Continue reading பாசமும் அகங்காரமும்

தம்பி

எதிர்பாராத நிகழ்வுகளால் நிலைகுலைந்து போகும் குடும்பங்கள், தன்னுடைய சமநிலையை எப்படி மீட்டுக் கொள்கின்றன என்பதை மீண்டுமொரு வித்தியாசமான திரைக்கதை வழியாக சொல்லியிருக்கிறார் பாபநாசம் தந்த ஜீத்து ஜோசப். ஒரு குடும்பத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை  மையமாகக் கொண்ட படங்களைத் தருவதற்கு தற்போதைக்கு இவரை விட்டால் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த வகைமையைச் சார்ந்த இயக்குநர்கள் தொடர்ந்து வருவதற்கு இதுபோன்ற படங்களின் வெற்றி சிவப்புக் கம்பளம் விரிக்கலாம். Drone வழியாக எடுக்கப்பட்ட முதல் காட்சி, ஒரு… Continue reading தம்பி

Munch Tantra

பல்லாயிரக் கணக்கான சதுர அடிகளை உள்ளடக்கி, வானுயர்ந்திருந்த அந்த பிரமாண்டமான வணிக வளாகத்தில் ஒரு 100 சதுர அடி மட்டுமே கொண்ட ஒரு இடத்தில் இரு இளைஞர்கள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். இருபதுகளின் நடுவில் இருக்கலாம் அவர்களுடைய வயது. அவர்கள் அணிந்திருந்த அடர் கருப்பு நிற ஜுன்ஸுக்குள்  நேர்த்தியாக செலுத்தப்பட்டிருந்த மென் சிவப்பு நிற டீ-சர்ட் கசங்கலேதுமின்றி 'Munch Tantra' என புன்னகைத்தது. இந்தியாவில் மிக விரைவாக வளர்ந்து வரும் உணவகங்களுடைய விருந்தோம்பல் சமீப காலங்களில் மலைக்க வைக்கிறது.… Continue reading Munch Tantra

கவிஞர்களும் மேதைகளும்

ஒரு பிரமிடை மேல்கீழாக திருப்பி வைத்தது போலிருந்தது அந்த பிரமாண்டமான குளம். பெரிய ஆலயத்தின் பொற்றாமரைக் குளமாக இருக்கலாம். அத்தலைகீழ் பிரமிடின், இருபக்கங்கள் ஒன்று சேரும் ஒரு மூலையிலுள்ள நீண்ட படிக்கட்டு ஒன்றில் அமர்ந்திருக்கிறார் நாயகி. தன்னை எது இயக்கி இங்கு கொண்டு வந்திருக்கிறது என்று புரியாத குழப்பமுமாய்; அச்சமும் பாதுகாப்பும் ஒன்று சேர்ந்து தந்த பதற்றமும், மகிழ்ச்சியுமாய் தனக்கு பின்னால் சற்று மேலேயுள்ள படிக்கட்டுகளில் நின்று பேசிக் கொண்டிருக்கும் நாயகனின் கோபத்தில் கொப்பளித்து வரும் சொற்களை… Continue reading கவிஞர்களும் மேதைகளும்

Alex in Wonderland

ஹல்லேலூயா...லாலலாலா… மாஷா அல்லா...லாலலாலா…. ஹரே கிருஷ்ணா….ஹரே ராமா…. என ஆரம்பித்து திருப்பதி பாலாஜியில் முடித்தவுடன், தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து இறங்கி மேடையில் நின்றவாறே சுற்றியிருக்கும் பார்வையாளர்களின் கரகோசத்திற்கு ஏற்ப தன் இரு கைகளின் கட்டை விரலையும் உயர்த்திக் கொண்டேயிருந்தார் அலெக்ஸ். முகத்தில் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தால், நான் திக்குமுக்காடிப் போய்விடவில்லை என்பதை மறைக்கும் எளிய புன்னகை. Amazon Primeக்காக  அலெக்ஸ் தனியொருவனாக நடத்திய அந்த Stand up comedy நிகழ்ச்சி எனக்கு மிகவும் அசாத்தியமான ஒன்றாக… Continue reading Alex in Wonderland

பனிவிழும் இரவு

I think you might like this book – "பனிவிழும் இரவு (Tamil Edition)" by Muthukumar M. Start reading it for free: http://amzn.in/2nsIsnq வெயில், பனி போன்ற காலநிலைகள் நம்முள் நாமறியாமல் இருக்கும் ஏதாவது ஒன்றை நமக்கு உணர்த்திவிட்டுச் செல்கின்றன. கூடவே மார்க்சியமும் சேரும்போது, ஏற்படும் ரசாயான மாற்றம் நம் புரிதல்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. This is the first book of mine in Kindle. You… Continue reading பனிவிழும் இரவு