நவீன அல்லது சமகால மாற்றங்கள், ஒரே சமயத்தில் வளர்ச்சியாகவும், சிதைவாகவும் வெவ்வேறு தரப்பினரால் அவதானிக்கப்படுகின்றன. அதனால்தான் என்னவோ, மாற்றங்கள் எப்போதும் வளர்சிதை மாற்றங்கள் என்று உருவகிக்கப் படுகின்றன போலும். சிதைவாக மட்டுமே உணர்பவர்கள் பெரும்பாலும், அச்சிதைவை விரும்பாத அல்லது அதனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர் கொள்ள முடியாத முதியவர்கள். இவர்களை பழமை விரும்பிகள் என்றும் கூட உருவகிக்கலாம். மாற்றங்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தை காவு கொள்ளும் எனில் அச்சிதைவிற்கு பண்பாட்டு என்ற உரிச்சொல்லை வல்லமை இருந்தால் இவர்களால் அளிக்க… Continue reading ரமணிகுளம் – சென்னையின் பசுமை
Month: December 2023
மாற்றுமெய்மையும் மெய்மையும்
புதுமைப்பித்தன், சொ.விருத்தாசலம் என்ற பெயரில் எழுதிய (🙂) கட்டுரைகளில் சிலவற்றை நீண்ட நேரத்திற்கு வாசிக்க வேண்டியிருந்தது. இரண்டு அல்லது மூன்று பக்கங்களே அத்தனை நீண்டதாக இருந்தது எனக்கு. ஒரு புனைவாளுமை, அவ்வாளுமையாக உருவாகி வந்ததை அவர்களுடைய இலக்கியம் சார்ந்த கட்டுரைகளே வெளிப்படுத்துகின்றன. கற்பனைச் சிறகுகளுக்கு முற்றிலுமாக ஓய்வளித்து விட்டு, சிறிதளவு ஊகங்களுடன் பெரும் தர்க்கங்களுடன் நிலத்தில் காலூண்டி நிற்பவை இக்கட்டுரைகள். இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கடவுளுக்கு அடுத்த இடத்தில் கலைஞனை பொறுத்திப் பார்க்கிறார் புதுமைப்பித்தன். கலை பொய்தான், மனிதர்கள்… Continue reading மாற்றுமெய்மையும் மெய்மையும்

