பரந்த புல்வெளியில் ‘96’ என்ற நம்பர் ஜொலிக்க நடக்கும், 22 ஆண்டுகளுக்குப் பிறகான re-unionல் திரிஷாவும், விஜய் சேதுபதியும் தாங்கள் விட்டுச் சென்ற காதல் தங்களுக்குள் இன்னும் எப்படி உறைந்திருக்கிறது என்று கண்டுகொள்ள முயற்சிக்கிறார்கள். இங்கு ஆரம்பிக்கும் ஜானுவின் தவிப்பும், ராமின் மாறாத அந்த ஈர்ப்பும் படம் முழுக்க கவிதையாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மென்மையான புல்வெளியைவிட மென்மையானவராக இருக்கிறார் ராம். மின்சார கனவில் வரும் பிரபுதேவா, கஜோல் மீதான தன் ஈர்ப்புக்கு காரணம் புரியாமல், “நீங்க...எப்படின்னாம்மா..பார்த்தா..கும்புடுற டைப்…”… Continue reading 96 – தவிப்பும் ஈர்ப்பும்
சண்டக்கோழி 2 – ஒரு ஆசுவாசம்
“வயசுக்கு மீறுன சுமைய தன் தலைமேல சுமந்துட்டு இருக்கான்டா எம்புள்ள…” என ஏழுவருடம் கழித்து நடந்து கொண்டிருக்கும் வேட்டக்கருப்பு திருவிழாவை நல்லபடியாக நடத்த வேண்டிய கட்டாயத்தின் பொருட்டு முதிர்ச்சியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் விஷாலைப் பார்த்து வெட்டுண்ட கழுத்துடன் கம்பீரமாக பேசுகிறார் ராஜ்கிரண். இப்படி, இருக்கிற வெற்றிடத்துக்கு நானும் இருக்கிறேன் என படம் முழுதும் கொடி கட்டிப் பறக்க முயன்றிருக்கிறார் விஷால். அறம் அருவி மேற்குத்தொடர்ச்சி மலை பரியேறும் பெருமாள் மற்றும் 96 என எதார்த்த சினிமாக்களிலிருந்து தங்களை… Continue reading சண்டக்கோழி 2 – ஒரு ஆசுவாசம்
தலித்தியம் – ஒரு புரிதல்
தீட்டுகள் நிறைந்த சமூக தீட்டான சாதிதான் ஒழிக்கப்பட வேண்டுமேயொழிய, மதமல்ல என்கிறார் அம்பேத்கர். சாதிகளைவிட, அதை முத்துக்களாக கோர்த்து வைத்திருக்கும் மதம்தான் ஒழிக்கப்படவேண்டும் என்கிறார் பெரியார். மதத்தை சமூகத்திலிருந்து உருவி விட்டாலும், சிதறிய முத்துக்களாய் சாதி இருந்து கொண்டேதான் இ்ருக்கும் என்ற தீர்க்கதரிசனப் பார்வை அம்பேத்கருடையது. ஏற்கனவே அம்பேத்கருடைய ‘இந்தியாவில் சாதிகள்’ மற்றும் ஜெயமோகனின் 'இந்திய ஞானம் ‘ வழியாக சாதிகளின் தோற்றம் மற்றும் யாருக்கு அது தேவை என்பதை குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/… Continue reading தலித்தியம் – ஒரு புரிதல்
A week end evening at ITC Grand Chola
வருடமொரு முறை நடக்கும் பெருநிகழ்விது. இம்முறை சோழர்கால கட்டிடக்கலையையொட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும் ITC நிறுவனத்திற்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் இரைச்சலும் கும்மாளமும் வியர்வையும் அயர்ச்சியும் ஆச்சரியமுமாக நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரோடு ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்து மூச்சுமுட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகச் சிக்கலான வேலை. பெரும்பாலும் திறந்தவெளிகளிலேயே நடத்தப்படும் இந்நிகழ்வு இம்முறை தரத்திற்கு பெயர்போன ITCன் உள்ளரங்கத்தில். 5.30 மணி நிகழ்வுக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது மணி மாலை 6ஐத் தொட்டிருந்தது. வழக்கமாக… Continue reading A week end evening at ITC Grand Chola
டால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய்
https://youtu.be/21Q_4mQG5TI ஒன்றைப் பற்றி எழுதிவிட்டு உடனே அதைப் படிக்கும் வாசகன் அதன்படி அவனை மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவது மிக மடத்தானமது. டால்ஸ்டாயும் இந்த மடத்தனத்தைத்தான் செய்தார் என்று சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய டால்ஸ்டாயின் 190வது பிறந்த நாளில் பேருரையாற்றிய ஜெமோ ( எழுத்தாளர் ஜெயமோகன்) சுட்டிக்காட்டினார். ரஷ்ய பேரிலக்கியத்தில் நீங்கா இடம்பெற்று அதன் வழியாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட கொண்டாடப்பட்டு வருகிற இலக்கிய ஆளுமையான டால்ஸ்டாயை… Continue reading டால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய்
வாலியின் அவதார வரிகள்
**ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே….** வாலியின் இந்த அவதார வரிகள், உலகத்தின் கால ஓட்டத்தை ஓடையின் நீரோட்டத்தோடு ஒப்பிட்டு, நம் மனதையும் நினைவுகளின் ஓட்டமாக உருவகித்திருக்கிறது. மனதென்னும் நீரோடையில் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகள் நிலையற்றவை. உலகம் அதன் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் காலத்தின் சாட்சியென்றால், மனம் அதன் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளின் சாட்சி மட்டுமே. அகத்தையும் புறத்தையும் இணைக்கும் குறுந்தொகை… Continue reading வாலியின் அவதார வரிகள்
படைப்பும் கல்வியும்
https://youtu.be/rg7SzQxipC8 இளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாளையொட்டி, MOP வைஷ்ணவா பெண்கள் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்வின் காணொளிப்பதிவிது. எந்த அசல் கலைஞனுமே தனக்கு தெரியாதவற்றைத்தான் செய்கிறான். 'அது' செய்யப்படும் வரை அவன் அறிதலில் 'அது' இல்லை. திருக்குறளை திருவள்ளுவர் தெரிந்து கொண்டா எழுதினார்? அதுபோலத்தான் என் இசையும் என்று படைப்பாளி என்பவன் யார் என்று இக்கல்லூரி மாணவிகளுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார் இசையின் ராஜா. வெற்றிடத்தில் இருந்துதான் எதுவுமே உருவாக முடியும்; அறியாமையில் இருந்துதான் அறிதலை உணரமுடியும் என்ற இந்த… Continue reading படைப்பும் கல்வியும்
தனித்தமிழும் தாய்மொழிப் பற்றும்
பகுத்தறிவின் எல்லைகளைச் சுட்டிக் காட்டி மாறாத உண்மை என்று எதுவுமில்லை என்று சொல்ல வந்த "பகுத்தறிவுப் பயங்கரங்கள்" என்ற பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனையை சாக்காக வைத்துக் கொண்டு மரபுகளோடு கட்டிப்புடி வைத்தியம் செய்து கொண்ட ஒரு கூட்டம் உருவானது உலகெங்கும். இங்கே தமிழகத்தில் உருவான அக்கூட்டத்தின் பதாகை சுதந்திர போராட்ட காலத்தில் கருக்கொண்ட ‘தனித்தமிழ்’ எனும் இயக்கத்திலிருந்து உருவான ‘தமிழ்தேசியம்’. ‘எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம் ‘ என்ற தலைப்பிட்ட ராஜ் கௌதமன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு… Continue reading தனித்தமிழும் தாய்மொழிப் பற்றும்
விடைபெறுகிறேன் உடன்பிறப்புக்களே
மாநில சுயாட்சிக்காக; சமூக நீதிக்காக; வெற்றுச் சிந்தாந்தங்களுக்கு எதிராக;தாய்மொழிப் பற்றிற்காக; தமிழ் மொழிக்காக; கொண்ட கொள்கைகளுக்காக என தமிழகத்தில் இருந்து கொண்டிருந்த கடைசிக் குரலும் தன் சத்தத்தை ஒட்டு மொத்தமாக நிறுத்திக் கொண்டிருக்கிறது. “ஓடினான்...ஓடினான்...வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்”...எதற்காக ஓடினான். தன் சுயத்தின் மேல் கொண்ட அபார நம்பிக்கைகாக. என்னால் இத்தமிழகத்தை வழிநடத்த முடியும் என்பதற்காக. என்னால் தமிழ் உள்ளங்களை என் தமிழாற்றலால் வெல்ல முடியும் என்பதற்காக. என்னால் அம்பேத்கரும் பெரியாரும் கனவு கண்ட சமூக நீதியை தமிழகத்தில்… Continue reading விடைபெறுகிறேன் உடன்பிறப்புக்களே
காலியான கண்ணாடிப்பேழை
சாய்வாக ராஜாஜி கூடத்தின் படிக்கட்டுகளில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது அந்த கண்ணாடிப்பேழை. தனக்கேயுரிய அழகோடு அந்த கறுப்புக் கண்ணாடி மலர்ந்து உறைந்திருக்கும் இந்த சூரியனின் கண்களை திகைப்போடும் துயரோடும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. தோளில் எப்போதுமிருக்கும் மஞ்சளாடை அந்த சூரியன் உதிக்கும் மலை போன்ற தோள்களை அதே காதலுடன் ஆரத்தழுவியிருக்கிறது. தமிழ்த்தாயின் மூத்தமகனை மார்பிலிருந்து கால்வரை போத்தியிருக்கிறது தேசியக் கொடி. சுவாசித்திருக்கும் போது அனைத்து தலைவர்களுக்கும் ஒன்றுதான். சுவாசம் நிற்கும்போதுதான் அத்தலைவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியவருகிறது.… Continue reading காலியான கண்ணாடிப்பேழை









