கூடையை நிறைத்திருக்கும் ஆரஞ்சு பழங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே இருக்கும் ஆப்பிள்கள் நம் கவனத்தை ஈர்ப்பவை. ஆனால், கண்ணை உறுத்தாத ஓர் ஓர்மையும் அழகும் கொண்டவையா என்பது, அந்த கூடையின் நிறம், அது வைக்கப்பட்டிருக்கும் இடம், பார்ப்பவரின் அப்போதைய மனநிலை, அவருடைய இயல்பு என நிறைய காரணிகளைப் பொறுத்துள்ளது. தன்னுடைய ஜப்பானிய பயணத்தை தாகூர் விவரிக்கும் விதம் அலாதியானது. கடலைகளின் நிலையாமையையும், அதில் கலக்கும் நதிகளின் நெகிழ்வையும், நிலத்தின் இறுக்கத்தையும் கொண்டிருக்கிறது. காற்றும், வானமும் தொடர்ந்து முயங்குகின்றன. இவ்விவரணைகள்… Continue reading தாகூரின் ஜப்பான் பயணம்
நிலமெல்லாம் ரத்தம்
தன் மூதாதையர் வாழ்ந்த நிலப்பரப்பின் மேல் கொண்டுள்ள பற்று இத்தனை தலைமுறைகளாக ஒரு சமூகத்தால் எப்படி தக்க வைத்துக் கொள்ளப்பட முடிகிறது என்ற ஆச்சரியத்தை விளக்க முற்படுகிறது இப்புத்தகம். உலகெங்கும் பரவி, தங்களுடைய அறிவாற்றலால் தனக்கென மரியாதைக்குரிய இடத்தை (பிரிட்டிஷ் பிரதமராகவும் ஒரு யூதர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்) அடைந்த பின்பும் கூட, எது யூதர்களை அமைதியிழக்கச் செய்திருக்கும் என்பது அவர்களுடைய வரலாறு மற்றும் பண்பாடுகளிலிருந்து விலகி நின்று பார்ப்பவர்களுக்கு எப்போதுமே புதிர் தான். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையை,… Continue reading நிலமெல்லாம் ரத்தம்
இருத்தலியம் – சில புரிதல்களும் குழப்பங்களும்
தனிமனிதன், அனைத்தையும் விட மிக முக்கியமாக கருதப்படுவது, மதத்திலிருந்து விலகி அறிவியல் அடிப்படையில் அமைந்த நவீனயுகத்தில் தான் என்ற பொதுப்புரிதலை சற்று குலைத்திருக்கிறது இருத்தலியத்தின் வேர்களை தேட முயலும் இப்புத்தகம். சமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதன் என்று பகுத்திருக்கும் இந்த நவீன யுகம், நான் இச்சமூகத்தின் விளைவல்ல; இச்சமூகம் தான் என்னுடைய விளைவு என்று அத்தனிமனிதனை அறைகூவச் செய்கிறது. பகுத்தறிவுக்கு முந்திய மதக் காலத்திலும், இக்குரல் வலுவாக ஒலித்திருக்கும் என்பதை கீர்கேகார்ட் (Søren KierkegaardDanish theologian and… Continue reading இருத்தலியம் – சில புரிதல்களும் குழப்பங்களும்
The AI and Me
Me: What does the Lion think when it stands infront of a mirror?Intellectual: Well, it is Obvious. Poor chap, Will see it as another Lion.Wise man: Lion is not a poor chap. It hasn't yet lost its wisdom offered by the Nature.Intellectual: oh..poor me...looks like I have given you the opportunity to pour all your… Continue reading The AI and Me
சுதந்திரமும் நம்பிக்கையும்
இடமும் காலமும்: மொட்டை மாடியில் காய்ந்திருந்த துணிகள் எங்களுக்காக காத்திருந்தன.வெயில் தணிந்திருந்த மாலைக் காற்றில் அசைந்தவாறே, மொட்டை மாடியின் சுவர்களை நோக்கி ஊஞ்சலாடிக் கொண்டிருந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த கிளிகளை ரசித்துக் கொண்டிருந்தது. ( நாங்களும் அதன் ரசிப்பில் இணைந்து கொண்டோம். முகத்தை வருடிய மென்காற்று வெப்பத்தை முழுதுமாக உதிர்த்திருந்தது, எங்களது ரசிப்பை நீண்ட நேரத்திற்கு நீட்டித்தது. ) Me: கிளி மாதிரி சத்தம் கேக்குது…எங்க இருக்குனு தெரியலயே… My wife: (சுவற்றை நோக்கி ஆடிக் கொண்டிருந்த… Continue reading சுதந்திரமும் நம்பிக்கையும்
Basic AI
இப்புத்தகத்தை வாசிக்கையில் இயக்குநர் சங்கரின் எந்திரன் படமும், எழுத்தாளர் ஜெயமோகனால் உருவாக்கப் பட்டிருக்கும் முழுமையறிவு என்ற அமைப்பும் நினைவில் வந்து கொண்டே இருந்தது. இப்புத்தக ஆசிரியர் சொல்வதைப் போல இப்புத்தகம் நமக்கொரு Unguarded Lion Safari (சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது?) தான். தொலைவிலுள்ள எரிமலைகளை பாதுகாப்பான கண்ணாடி கூண்டுக்குள் இருந்து பார்ப்பதை விட, முடிந்த அளவு அதனருகில் சென்று அதன் தீவிரத்தை உணரவைக்கும் ஒரு முயற்சி இப்புத்தகம் எனலாம். வெம்மையின் தீவிரத்தை உணர்ந்தால், அதிலிருந்து மீள்வதற்கு… Continue reading Basic AI
நானும் AIயும்
Me: சிங்கம் தன்னை கண்ணாடில பார்த்தா என்ன நினைக்கும்? அறிவாளி: அத இன்னொரு சிங்கம்னு நினைக்கும். முட்டாள் சிங்கங்கள். ஞானி: சிங்கம் முட்டாளல்ல. அது தான் இயற்கையின் ஞானம். அறிவாளி: ப்ச்ச்…போச்சுடா…இந்த மாதிரி கேள்விய கேட்டவுடனே எப்படித்தான் உங்களுக்கு மூக்கு வேர்க்குதுன்னு தெரியல ஞானி… Me: அப்ப கண்ணாடில இருக்குறது நான் தான்னு உணர்ர மனுஷன் முட்டாளா? அறிவாளி: (சற்று எரிச்சலுடன்) ஞானி, this is for you… ஞானி: (உற்சாகத்துடன்) கண்ணாடில இருக்குறது தன் பிம்பம்னு… Continue reading நானும் AIயும்
இருத்தலியமும் மார்க்ஸியமும்
சமூகம் என்பது கற்பனை அல்லது கும்பல் என்பதை உன்னதப்படுத்தும் ஒரு வார்த்தை என்பது சற்று திடுக்கிட வைக்கிறது. கீர்க்கேகார்ட் (Søren Kierkegaard, A Danish Philosopher 1813-55 ) மனிதர்களை கும்பல் என்றே உருவகிக்கிறார். இக்கும்பலால், அதன் பகுதியான தனிமனிதன் எந்த விதத்திலும் பாதிப்படைவதில்லை அல்லது தன்னை வரையறுத்துக் கொள்ள முடியாது என்கிறார். கிட்டத்தட்ட தனிமனித மனம் அல்லது ஆன்மா அல்லது அகம் மட்டுமே உள்ளது. இவ்வகத்திற்கும் புறத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை அல்லது அகம் புறத்தாலும் கட்டமைக்கப்படுகிறது… Continue reading இருத்தலியமும் மார்க்ஸியமும்
கொடைமடம் – அறமும் திறமையும்
தனக்கென உடைமை எதுவும் சேகரிக்க முடியாதவர்களை அல்லது அதற்கான வாய்ப்பு வழங்கப்படாததால் உடமைகளற்று இருப்பவர்களை பாட்டாளி வர்க்கம் என்று வரையறுத்துக் கொண்டால், தனக்கென உடைமை எதுவும் தேவையற்றவர்களை முதலாளி என்பதா? பாட்டாளி என்பதா? இவ்விரு வர்க்கங்களிலிருந்தும் அவர்கள் தோன்ற முடியும். புத்தர் நம்மை வசீகரிப்பது போல பாட்டாளி வர்க்கத்திலிருந்து எழும் உடைமைகள் எதுவும் தேவையில்லை எனும் புத்தர்கள் நம்மை வசீகரிப்பதில்லை. இல்லாதவன் துறப்பதற்கு என்னவிருக்கிறது என்பதாலா?பிளேட்டோ, இவர்களைப் போன்ற தேவைகளற்றவர்கள் அல்லது தன்னிறைவு கொண்டவர்கள் தான் தத்துவஞானிகளாக… Continue reading கொடைமடம் – அறமும் திறமையும்
கிருமி – It is not toxic
Fantastic indeed... படகை செலுத்துபவரின் கையைத் தேடிக் கண்டடைய முடியாமல், அவருடைய துடுப்பின் அசைவிற்கு ஒத்திசைவாக தலை மட்டும் அசைந்து செல்வதை காண்பதாக வரும் சித்தரிப்பு திகிலூட்டுகிறது. கடல் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த இணையரில் ஒருவரான அவரது தலையைத் தவிர, உடலின் அனைத்துப் பாகங்களிலும் தன்னை வலுவாக நிறுவிக் கொண்டிருக்கிறது அப்பூஞ்சை நோய். தங்களிடம் எஞ்சியிருந்த படகின் துணைகொண்டு ஆள்அரவமற்ற ஒரு தீவில் நீண்ட நாட்களாக இந்நோயின் துணையுடன் தங்கள் முடிவை நோக்கி… Continue reading கிருமி – It is not toxic






