முழுநிலவி்ரவு

கைவிடப்பட்டவர்களின் புகலிடமாய் மாறியிருந்த அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் பிரவேசிக்கிறார்கள் தேவாவும் ப்ரியாவும். பரந்து விரிந்திருந்த அந்த கட்டிடத்தின் தரைப்பகுதியெங்கும் புதர்மண்டி ஆங்காங்கே சிதிலமடைந்து போயிருந்த திண்டுகளால் நிரம்பியிருந்தது. அக்கட்டிடத்துக்கு கூரையென்ற ஒன்று இருந்ததற்கான தடயம் ஏதுமில்லை என்பதை உணர்ந்தவுடன்தான் புரிந்தது அது கட்டிடம் அல்ல, சுற்றுச்சுவர் மட்டுமே கொண்ட கைவிடப்பட்ட மிகப்பரந்த நிலப்பகுதி என்று. சாலையிலிருந்து ஆறேழு அடி கீழே இருந்த இந்நிலப்பகுதியின் இருளை விலக்கியிருந்தது அன்றைய முழுநிலவு. பௌர்ணமி இ்ரவைத்தவிர வேறு இரவுகளில் அங்கு வெளிச்சத்திற்கான… Continue reading முழுநிலவி்ரவு

கடல்கன்னியுடன் ஒரு நாள்

கடற்கரையைச் சார்ந்து வாழும் நெய்தல் நிலத்தைச் சார்ந்த பரதவர்களின் (மீனவர்களின்) சிதிலமடைந்த கோயில் போலிருந்தது அந்த கற்கட்டிடமும் அதிலிருந்த சிற்பங்களும். நிறைய சதுர வடிவ அறைகளைக் கொண்டிருந்த அக்கற்கட்டிடத்தில் நீள்வட்ட வடிவில் ஒரு பெண்முகம். சாந்தமும் ஏளனமும் கலந்த கயல்விழியும், நீண்ட மூக்குமாய் நீண்டு செழுமையான மார்பகங்களோடு பாதியில் முடிவடைந்திருந்தது அச்சிற்பம். அக்காலப் பரதவர்களின் பெண் தெய்வமாக இருக்கலாம் என்று பார்வையைச் சற்று தாழ்த்தியபோது கடல்கன்னி நக்கலோடு புன்னகைத்துக் கொண்டு தனது வலது முழங்கையைத் தரையில் ஊண்டி… Continue reading கடல்கன்னியுடன் ஒரு நாள்

ஒரு செவ்வியல் உரை

ஒரு செவ்வியல் (Classic) நாவல் போல உரையையும் அமைத்துக்கொள்ள முடியுமென்று நிரூபித்துக் காட்டுவதற்காகவே ‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் தன்னுடைய பேருரையை ஆற்றியிருக்கிறார் சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன் (ஜெமோ). அறிவுச்செயல்பாடுகளிலிருந்து நீண்டகாலமாக விலகியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், கிட்டத்தட்ட ஒரு 3 மணி நேரம் தொய்வேயில்லாமல் இலக்கியத்தை மட்டுமே தன்னுடைய அறிதலாகக் கொண்ட ஒருவரால் இத்தலைப்பில் ஒரு உரையை ஆற்றமுடியுமா? அதை தலைக்கு 300 ரூபாய் கட்டி ஒரு 300 பேர் ஆழ்ந்தமர்ந்து கேட்டுணரமுடியுமா?… Continue reading ஒரு செவ்வியல் உரை

விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2

https://muthusitharal.com/2019/01/06/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-d/ முன்பகுதி ராஜ்கௌதமன் - மார்க்ஸியத்திலெழுந்து பின்நவீனத்துவத்தில் துயில்பவர் லீனா மணிமேகலையின் அமர்வுக்குப்பின் அரங்கிலெழுந்த சலசலப்பின் அடர்த்தியைக் குறைத்து இல்லாமலாக்கியது, கொடுக்கப்பட்ட 15 நிமிட இடைவெளி. மீணடுமொருமுறை அங்கிருந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளின் தரிசனத்திற்குப் பிறகு அரங்குக்கு திரும்பியபோது, மேடையில் ஜெமோ வீற்றிருந்தார். இவ்வருட விழாவின் விருது நாயகனான வரலாற்றாய்வாளர், மார்க்சியர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ராஜ்கௌதமன் அவர்களை தன்னுடன் வந்தமருமாறு அழைத்தார் ஜெமோ. ஏன் இந்த அமர்வை ஜெமோ ஒருங்கிணைத்தார் என்பது, அவர்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2

விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 1

https://muthusitharal.com/2018/12/30/விஷ்ணுபுரம்-விருது-விழா-day-1/ முன்பகுதி ஜெமோவுடன் ஒரு காலை நடை ‘ஜெ இப்பத்தான் கீழ போனாரு…’ என்ற சத்தம் முணுமுணுப்பாய் அறையின் கதவு வழியே கசிந்து கொண்டிருந்தது, காலையில் முழிப்புத் தட்டியிருந்தபோது. சடுதியில் கிளம்பி மூன்றாவது தளத்திலிருந்து தரைதளத்திற்கு வந்தபோது, கச்சேரி களைகட்டியிருந்தது. தங்கும் அறைகளிருந்த கட்டிடத்தின் சுவர்களைச் சற்று நீட்டித்துக் கட்டப்பட்ட நீண்ட திண்ணையில் சிலர் அமர்ந்திருக்க, சுற்றிப்பலர் நின்றிருக்க நடுநாயகமாக நின்றிருந்தார் ஜெமோ. காந்தியம், கம்யூனிசம் என்று போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 40 பேரிருந்த அந்த கலந்துரையாடலில் என்னையும்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 1

விஷ்ணுபுரம் விருது விழா – Day 1 Part 2

https://muthusitharal.com/2018/12/25/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-da/ முன்பு நரன்- சாம்ராஜ் - ஒரு 'அற்புதக்' கூட்டணி சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் இருக்கும் வாசகர் பரப்பு கவிதைகளுக்கு ஏன் இல்லை என்ற கேள்விக்குப் பதிலாக, கவிதை வாசகனின் அதீத உழைப்பைக்கோரும் இலக்கிய வடிவம். இந்த அறிவியக்கச் செயல்பாடு காரணமாகத்தான் பெரும்பாலான வாசகர்கள் கவிதையிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்றார் சாம். அது சரி வலுவுள்ளவர்கள் தானே வைரம் வாங்கமுடியும் என்றெண்ணியபோது, அறிவியக்கவாதிகளான புரோலட்டேரியன்களை (கம்யூனிச தோழர்கள்) அற்புதமாய் ‘அற்புதம்’ என்ற அவர்களுடைய வார்த்தையை வைத்தே கலாய்த்துவிட்டார். https://muthusitharal.com/2018/12/25/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-da/ ‘அற்புதம்’… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா – Day 1 Part 2

விஷ்ணுபுரம் விருது விழா 2018 -Day 1-Part 1

தன் இரண்டு உள்ளங்கைகளையும் கைதட்டுவது போல் இணைத்து “எனக்கு இந்த ஆய்வும் புனைவும் இப்படித்தான் ஒட்டியிருக்கு. இப்படி இரண்டும் struck ஆகிப்போனது தான் என் கோளாறுன்னு என் வீட்டுக்காரம்மா கூட சொல்றாங்க” என்று ஒட்டிய உள்ளங்கைகளை பிரிக்க முயன்று தோற்பதுபோல் பாவனை காட்டினார் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் நாயகன் ராஜ்கௌதமன். “ஆனா..இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு…” என ஒட்டியிருந்த கைகளை பிரித்து இடதுதோளை உடம்போடு ஒட்டிக்கொண்டு, இடதுகை சுட்டுவிரலை மட்டும் உயர்த்தி, வலது தோளை சற்றுத் தாழ்த்தியது, பெரிய மேடைகளில்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 -Day 1-Part 1

டிசம்பர் கொண்டாட்டம் – Part 2

https://muthusitharal.com/2018/12/15/டிசம்பர்-கொண்டாட்டம்-part-1/ மணி 12த் தொட்டுக்கொண்டிருந்தது. அந்த சதுர வடிவ அறையிலிருந்த அடர் சிவப்பு நிற இருக்கைகள் மொத்தமாக நிரம்பியிருந்தது. அறையின் கிழக்குப்பகுதியை வெண்திரையும், மையப்பகுதியை தொகுப்பாளர்களும் கணிணிகளும் எடுத்துக்கொள்ள மூன்று திசைகளிலும் ‘ப’ வடிவில் அமர்ந்திருந்த அனைவரும் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். “என்னது மறுபடியும் வர்ணாசிரமா? “ என்று திராவிடச்சிங்கங்கள் சிலர் முழங்கினர். வழக்கம்போல், எங்களுடைய தொழில்நுட்பப் பிரிவு வங்கிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தல உமா சுருக்கமாக முடித்துக்கொள்ள, அங்கிருந்த தொகுப்பாளர்கள் வெகு இலாவகமாக ஒட்டுமொத்த… Continue reading டிசம்பர் கொண்டாட்டம் – Part 2

டிசம்பர் கொண்டாட்டம் – Part 1

“I need a queen from this Group to Play the Game called ‘Queen of Sheeba’...” என புன்னகைத்துக் கொண்டே தொகுப்பாளர் அந்த அறையில் கூடியிருந்தவர்களை சுற்றுமுற்றும் நோக்க, இயல்பாகவே அங்கிருந்த பெண்களின் கைகள் தங்கள் கூந்தலை கோத ஆரம்பித்திருந்தது, எங்கே தன்னை அழைத்து விடுவார்களோ என்ற மெல்லிய பதற்றத்தோடு. அங்கிருந்த ராணிகளின் முகத்தில் சிறு கீற்றாக தோன்ற ஆரம்பித்த வெட்கப் புன்னகை, “All women are Queens only” என்ற அங்கிருந்த… Continue reading டிசம்பர் கொண்டாட்டம் – Part 1

பொறியன் டூடாட்ஓ

கைவிடப்பட்ட அந்த விவசாய நிலத்தைவிட்டு சூரியனும் தன் கதிர்களை வெகு விரைவாக விலக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாலைப்பொழுது அது. நெல் நாற்றுகளுக்குப் பதிலாக அங்கு நடப்பட்டிருந்த கைப்பேசிகளுக்கு உயிரளிக்கும் நெடிய கோபுரத்தை நோக்கி தன்தோள்களிரண்டும் தளர , நடை தடுமாற, தலைதுவள கைகளிரண்டையும் விரித்து உயர்த்தியவாரே ‘'நன்னயப் புள்ளினங்காள் …” என்று முனகி முழங்கிச் செல்கிறார் ஒரு முதியவர். இப்பொன்னுலகமும், பிரபஞ்சமும் பறவைகளால் ஆனது; ஆளப்படுவது என்ற நம்மாழ்வாரின் வரிகளான "பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்" என்ற… Continue reading பொறியன் டூடாட்ஓ