தெய்வங்களும் பாவங்களும்

உடலில் ஊறிக்கொண்டிருக்கும் சாமி எறும்பின் உணர்வைத் தருபவை இயக்குநர் விக்ரமனின் படங்கள். வன்முறை என்றால் அந்த சாமி எறும்பு கடிக்கும் அளவுக்குத்தான் இருக்கும். பெரும்பாலும் நல்லுணர்வுகளான பாசம் ,மரியாதை, பொறுப்புணர்வு, பொறாமை கொள்ளாமை என அனைத்தையும் கலவையாக்கி சிமெண்ட் போல நம்மேல் பூசியனுப்புவார். 90களின் இளைஞர்களிடம் நேர்மறை எண்ணங்களை விதைத்து அவர்களின் ஆளுமையை செதுக்கிய அக்கறையுள்ள இயக்குநர். இப்படிப்பட்ட படங்களின் தேவைகள் இப்போது குறைந்து விட்டனவா என்ன? இப்போதுள்ள பெரும்பாலான படங்கள் “நீ பச்சை தமிளேண்டா ஷேர்… Continue reading தெய்வங்களும் பாவங்களும்

Advertisement

Blockchain – ஒரு நம்பிக்கைப் புரட்சி

“வங்கிகள் மறைந்து நேர்மையானவர்களே தனி வங்கிகளாவார்கள்.” “நிலப்பதிவு அலுவலங்கள் மறைந்து நேர்மையானவர்களே தனி நிலப்பதிவாளர்களாவார்கள்” இப்படி ஆரம்பித்து நீண்டு கொண்டே போகிறது, கூடிய விரைவில் காணாமல் போகக்கூடியவைகளின் பட்டியல். நம்பிக்கையாக பரிவர்த்தனைகளை நம்மிடையே நிகழ்த்திக்கொள்ள நாம் ஏற்படுத்திக் கொண்ட அனைத்து பெரு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் என்னால் கரைத்து இல்லாமலாக்கி விட முடியுமென்று மார்தட்டி நிற்கிறது வளர்ந்து வரும் புது தொழில்நுட்பமான 'Blockchain '. இணையத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல் இது என்கிறார்கள் வல்லுநர்கள். இணையம் தகவலை பரவலாக்கியதென்றால், Blockchain… Continue reading Blockchain – ஒரு நம்பிக்கைப் புரட்சி

சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave

  எழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரதம் பற்றிய வெண்முரசு நாவல்கள் வரிசையில் தருமனுக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட நாவல் ‘சொல்வளர் காடு’. கௌரவர்களுடனான சூதில் அனைத்தையும் இழந்த தருமன், திரௌபதியுடனும் தன் சகோதர்களுடன் காடேகிச் (வனவாசம் ) செல்கிறான். அவர்களினூடாக நம்மையும் பயணிக்க வைக்கிறது இந்நாவல்.    சொல்வளர் காட்டை தருமனின் ஊதியமில்லா நீண்ட நாள் விடுப்பு ( sabbatical leave) என்று தான் நான் உருவகித்துக் கொள்கிறேன். பெரு நிறுவனங்களின்  தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் குழப்பங்களும் அது… Continue reading சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave

சந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு

சந்தோஷ் சுப்ரமணியம். கிட்டத்தட்ட நூற்றி xவது தடவையாக தொலைக்காட்சியில். நானும் பார்ப்பது கிட்டத்தட்ட பதிxஆவது தடவை. பத்து வயதான என் பொண்ணும் கடந்த இரண்டாண்டுகளாக எப்போது போட்டாலும் இந்தப் படத்தை கைகொட்டி சிரித்து ரசிக்கிறாள். நானும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த நேர்த்தியான இறுதிக்காட்சிகளை தவறவிடுவதில்லை. இப்போது தான் நமக்கு கொஞ்சம் எழுத வருகிறதே என்ற உந்துததில் இப்படம் பற்றிய என்னுடைய அவதானிப்புகள் இவை.   மிகவு‌ம் சிரத்தையுடன் எடுக்கப்படும் இறுதிக்காட்சிகள் நம்மையும்… Continue reading சந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு