ஒரு பிரமிடை மேல்கீழாக திருப்பி வைத்தது போலிருந்தது அந்த பிரமாண்டமான குளம். பெரிய ஆலயத்தின் பொற்றாமரைக் குளமாக இருக்கலாம். அத்தலைகீழ் பிரமிடின், இருபக்கங்கள் ஒன்று சேரும் ஒரு மூலையிலுள்ள நீண்ட படிக்கட்டு ஒன்றில் அமர்ந்திருக்கிறார் நாயகி. தன்னை எது இயக்கி இங்கு கொண்டு வந்திருக்கிறது என்று புரியாத குழப்பமுமாய்; அச்சமும் பாதுகாப்பும் ஒன்று சேர்ந்து தந்த பதற்றமும், மகிழ்ச்சியுமாய் தனக்கு பின்னால் சற்று மேலேயுள்ள படிக்கட்டுகளில் நின்று பேசிக் கொண்டிருக்கும் நாயகனின் கோபத்தில் கொப்பளித்து வரும் சொற்களை… Continue reading கவிஞர்களும் மேதைகளும்