தம்பி

எதிர்பாராத நிகழ்வுகளால் நிலைகுலைந்து போகும் குடும்பங்கள், தன்னுடைய சமநிலையை எப்படி மீட்டுக் கொள்கின்றன என்பதை மீண்டுமொரு வித்தியாசமான திரைக்கதை வழியாக சொல்லியிருக்கிறார் பாபநாசம் தந்த ஜீத்து ஜோசப். ஒரு குடும்பத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை  மையமாகக் கொண்ட படங்களைத் தருவதற்கு தற்போதைக்கு இவரை விட்டால் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த வகைமையைச் சார்ந்த இயக்குநர்கள் தொடர்ந்து வருவதற்கு இதுபோன்ற படங்களின் வெற்றி சிவப்புக் கம்பளம் விரிக்கலாம். Drone வழியாக எடுக்கப்பட்ட முதல் காட்சி, ஒரு… Continue reading தம்பி

Advertisement

Munch Tantra

பல்லாயிரக் கணக்கான சதுர அடிகளை உள்ளடக்கி, வானுயர்ந்திருந்த அந்த பிரமாண்டமான வணிக வளாகத்தில் ஒரு 100 சதுர அடி மட்டுமே கொண்ட ஒரு இடத்தில் இரு இளைஞர்கள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். இருபதுகளின் நடுவில் இருக்கலாம் அவர்களுடைய வயது. அவர்கள் அணிந்திருந்த அடர் கருப்பு நிற ஜுன்ஸுக்குள்  நேர்த்தியாக செலுத்தப்பட்டிருந்த மென் சிவப்பு நிற டீ-சர்ட் கசங்கலேதுமின்றி 'Munch Tantra' என புன்னகைத்தது. இந்தியாவில் மிக விரைவாக வளர்ந்து வரும் உணவகங்களுடைய விருந்தோம்பல் சமீப காலங்களில் மலைக்க வைக்கிறது.… Continue reading Munch Tantra