நவீனக் கல்வியின் பலமாக நான் எண்ணுவது அது நமக்களிக்கும் ஒரு பொதுத்தன்மையை. குறிப்பாக, எந்த ஒன்றிலுமே ஆரம்பத்திலேயே பெரும் ஈடுபாட்டோடு தன்னையறியாமல் மூழ்கிப் போவதைத் தடுக்கிறது அல்லது தவிர்க்க வைக்கிறது. இதன் விழைவுதான் அந்த பொதுத் தன்மை என்றும் எண்ணுகிறேன். ஆற்றில் செல்லும் படகு அதன் சுழிக்குள் சிக்காமல் செல்வது போல. உயர் கல்வியின் போது நம் அகத்தின் ஒத்திசைவுக்கேற்ப ஏதாவது ஒரு சுழியில் நம்மை மூழ்கடித்து அதில் நிபுணத்துவம் பெறும் முதிர்ச்சியைத் தருவது, ஆரம்பகட்ட கல்வியில்… Continue reading குதிரைமரம் – ஒரு நெசவு
Month: February 2022
பொன்னுலகம் – மரபும் நவீனமும்
மரபுக்கு திரும்புவோம் என்ற கூக்குரல் அதிகரித்திருக்கிறது. அப்படி என்றால் என்னவென்று கேட்கும் கூக்குரலும் ஒலிக்கிறது. பக்தி, மதம்,சாதிக்கு திரும்புவது தான் இது என்றும் அதற்கு பொதுப்படையாக பதிலளிக்கிறார்கள் இந்த திடீர் மரபுக் காதலர்கள். ஆனால் எப்போது நாம் இந்த பக்தி, மதம் மற்றும் சாதியை கைவிட்டோம். சாதியை வேண்டுமானால் சற்று மறைத்திருக்கலாம், ஆனால் இம்மூன்றையும் எக்காலத்திலும் நாம் கைவிட்டதில்லை. இந்த கூர் கத்தியை நவீனம் என்ற கைப்பிடி கொண்டு தான் உபயோகிக்கிறோம். அவர்கள் விடச்சொல்வது இந்த கைப்பிடியைத்தான்.… Continue reading பொன்னுலகம் – மரபும் நவீனமும்