பஞ்சபூதங்களும் முகவடிவாகும்

தன்னைத் தன் உணர்வுகளுக்கு ஏற்ப வெளிப்படுத்திக் கொள்ள முடியாத முகம்,  இயல்பாகவே ஒரு சோகத்தன்மையை கொண்டிருக்கிறது. சலங்கை ஒலியில் வரும் கமல் மற்றும் குறிப்பாக ஜெயப்பிரதாவின் முகங்கள் போல.  ஆனால், புறவுலத்தின் சீண்டல்கள் ஒரு எல்லையை மீறும்போது இயல்பாகவே கமலின் உருவத்தை எடுத்துக் கொண்ட அந்த நாட்டிய கலைஞனின் செருக்குணர்வு உடம்பு முழுவதும் முகமாய் மாறி வெளிப்படுகிறது. இடுப்பில் தன் இரு கைகளையும் அமர்த்தியவாறு, தன் வலக் காலணியை இடப்பக்கமும், இடக்காலணியை வலப்பக்கமும் உதறி வீசுவதில் ஆரம்பிக்கும்… Continue reading பஞ்சபூதங்களும் முகவடிவாகும்

Advertisement

பனிவிழும் இரவு

பதாகை இதழில் வெளிவந்த எனது முதல் சிறுகதை. https://padhaakai.com/2018/02/10/white-night/ அப்புகையை நோக்கியவாறு பொழிந்திருந்த பனியில் கால்புதைய நடந்தது, அணிந்திருந்த மூன்றடுக்கு உடை தக்க வைத்திருந்த வெப்பம் போதவில்லை என உணர்த்தியது. கொஞ்சம் வெப்பம் வேண்டி ஊரிலிருந்து எடுத்து வைத்திருந்த தங்க வடிப்பான் ஒன்றை கட்டில் இருந்து உருவி பற்ற வைத்துக் கொண்டேன். அவர்கள் மரக் கட்டைகளை எரித்து கனன்று கொண்டிருந்தார்கள். நான் என்னை எரித்து…