He came down the track and converted that what it supposed to be good length delivery into a full toss, and despatched it to the mid wicket fence…
He comes into the line of that in swing delivery to give himeself a room for that extra cover six…
It trapped him in the crease infront of the stump…That was a googly…upgoes the umpire’s finger…
என்ற இந்த நுட்பமான வர்ணனைகளை புரிந்து கொள்பவர்களுக்காக மட்டுமே இருந்த கிரிக்கெட்டை மெல்ல மெல்ல சாமானியர்களுக்குமான ஒன்றாக ஆக்கிய முயற்சிகளின் உச்சம் தான் IPL என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட கர்நாடக இசையை சாமானியர்களும் ரசிக்கும் படி செய்த இளையராஜா தான் நினைவுக்கு வருகிறார். மழையால் ஆட்டம் தடைபட்டதை கொண்டாட்டமாக ஆக்கிக் கொள்ளும் திருவிழா மனநிலை கிரிக்கெட் மேதாவித்தனமுள்ள ரசிகர்களுக்கு வாய்ப்பதில்லை. கிட்டத்தட்ட பூனைக்குட்டியை அதன் வாலால் தூக்கிப் பார்க்க முயலும் குழந்தைகளின் மனநிலை IPL ரசிகர்களுடையது. இந்த மனநிலை மட்டுமே தோனி ஆட வர வேண்டும் என்பதற்காக ரவீந்திர ஜடேஜாவை அவுட்டாகச் சொல்லி கூச்சமின்றி வேண்டி நிற்கும்.
இயல்பாக சாமானியர்களுக்கான எதுவுமே ஒரு தகுதியான நாயக பிம்பத்தைத் தேடும். திறமையும், உழைப்பும் கொண்ட ஒருவர் ஒரு மனதாக எந்த நிபந்தனையுமின்றி அங்கீகரிக்கபடும் ஒரு அதிர்ஷ்டத் தருணமிது. இளையராஜாவிற்கு 1980களில் நடந்தது இப்போது தோனிக்கு நிகழ்கிறது.
IPL வழியாக தங்களுடய கிரிக்கெட் நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்டு வீரர்களாக, மேதாவி ரசிகர்களாக தங்களை உருமாற்றிக் கொண்ட நிறைய பேர் உண்டு. ஆனால் தொழில்முறை நேர்த்தி கொண்ட நடுவர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆடுகள தயாரிப்பாளர்கள் என இன்னும் உருமாற வேண்டிய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் IPL பெரும் பங்கு வகிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Very true
LikeLike