தேவதேவனின் தையல்

நேற்றையும், நாளையையும் இன்றிலிருந்து பிரித்தெடுத்தது போல் இருந்தது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த கோலம். இன்றால் மட்டுமேயான அம்முகம், கிட்டத்தட்ட காலத்திலிருந்து விடுதலை கிட்டியது போன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆனால், காலம் வலியது. இன்றில் மட்டுமே இருப்பது நிர்வாணத்திற்குச் சமம் என்று அப்புனிதனின் நேற்றும் நாளையுமாகிய கைகளை சிலுவையில் இருந்து பிரித்தெடுத்து அவரின் நிர்வாணத்தை, விடுதலையை காவு வாங்கிக் கொண்டது. கிறிஸ்துவும் வேறு வழியின்றி உயிர்த்தெழுந்தார், மீண்டும் காலத்தில் சிறைபட்டிருக்க; மீண்டும் இப்பாவிகளை நல்வழிப்படுத்த. ஏனோ தெரியவில்லை, ஈஸ்டர்… Continue reading தேவதேவனின் தையல்

Advertisement

அனுபவமும் கலையும்

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் கதைகளைப் பற்றிய நற்றுணை கலந்துரையாடலில் பேசிய காணொளியும் அதன் உரை வடிவமும். அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த வாய்ப்பினை எனக்களித்த நற்றுணை அமைப்பினருக்கு நன்றி. சிறு வயதில் எனக்குப் பரிட்சயமாயிருந்த ஆறுமுகக் காவடிகளையும், முனி விரட்டிகளையும்  என்னுடைய நினைவடுக்களில் இருந்து மேலெலும்பி வரச்செய்த ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி.  தமிழ் விக்கி இவ்வுரைக்கான தயாரிப்பின் போது, Google என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்ற இடம் தமிழ் விக்கி தளத்திற்கு. ஒரு ஐந்து நிமிட வாசிப்பில்… Continue reading அனுபவமும் கலையும்