நவீன அல்லது சமகால மாற்றங்கள், ஒரே சமயத்தில் வளர்ச்சியாகவும், சிதைவாகவும் வெவ்வேறு தரப்பினரால் அவதானிக்கப்படுகின்றன. அதனால்தான் என்னவோ, மாற்றங்கள் எப்போதும் வளர்சிதை மாற்றங்கள் என்று உருவகிக்கப் படுகின்றன போலும். சிதைவாக மட்டுமே உணர்பவர்கள் பெரும்பாலும், அச்சிதைவை விரும்பாத அல்லது அதனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர் கொள்ள முடியாத முதியவர்கள். இவர்களை பழமை விரும்பிகள் என்றும் கூட உருவகிக்கலாம். மாற்றங்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தை காவு கொள்ளும் எனில் அச்சிதைவிற்கு பண்பாட்டு என்ற உரிச்சொல்லை வல்லமை இருந்தால் இவர்களால் அளிக்க… Continue reading ரமணிகுளம் – சென்னையின் பசுமை
மாற்றுமெய்மையும் மெய்மையும்
புதுமைப்பித்தன், சொ.விருத்தாசலம் என்ற பெயரில் எழுதிய (🙂) கட்டுரைகளில் சிலவற்றை நீண்ட நேரத்திற்கு வாசிக்க வேண்டியிருந்தது. இரண்டு அல்லது மூன்று பக்கங்களே அத்தனை நீண்டதாக இருந்தது எனக்கு. ஒரு புனைவாளுமை, அவ்வாளுமையாக உருவாகி வந்ததை அவர்களுடைய இலக்கியம் சார்ந்த கட்டுரைகளே வெளிப்படுத்துகின்றன. கற்பனைச் சிறகுகளுக்கு முற்றிலுமாக ஓய்வளித்து விட்டு, சிறிதளவு ஊகங்களுடன் பெரும் தர்க்கங்களுடன் நிலத்தில் காலூண்டி நிற்பவை இக்கட்டுரைகள். இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கடவுளுக்கு அடுத்த இடத்தில் கலைஞனை பொறுத்திப் பார்க்கிறார் புதுமைப்பித்தன். கலை பொய்தான், மனிதர்கள்… Continue reading மாற்றுமெய்மையும் மெய்மையும்
திருவருட்செல்வியும் யோவானும்
யோவான் தரமான காண்டம் தான வச்சிருக்க என இமானுவலிடம் இருக்கும் காண்டம்களை உறுதி செய்து கொள்ளும் தெளிவை அவள் சற்றுமுன் இமானுவலுடன் சேர்ந்தமர்ந்து பருகிய பியரால் குலைத்து விட முடியவில்லை. குழப்பமெல்லாம், இமானுவலுக்குத் தான். உடனே சாட்சி என்கின்ற இந்நெடுங்கதை, இம்மானுவலை புறத்தில் வார்ப்பெடுத்திருக்கும் அவனுடய சகோதரனான யோவானை நோக்கி நகர்கிறது.அகத்தே இமானுவலின் எதிர்முனையான யோவான் தன்னுள் ஒடுங்கிய ஒருவன். இதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது இமானுவலின் ஒழுக்கமின்மைக்காக தன் தந்தையால் தான் தண்டிக்கபட்டதாகக் கூட இருக்கலாம்.… Continue reading திருவருட்செல்வியும் யோவானும்
வாஜ்பாயி – சேற்றில் முளைத்த செந்தாமரை
சில வருடங்களுக்கு முன்பு படித்த, நரசிம்மராவ் அவர்கள் பற்றிய புத்தகம்தான், வாஜ்பாயி பற்றிய இந்தப் புத்தகத்தை ஏதேச்சையாக Odyseeyல் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது. ராமசந்திர குகாவின் The finest biography of an Indian prine minister that I have read என்ற பரிந்துரையும் இப்புத்தகத்தின் முகப்பட்டையிலேயே இருந்தது. நரசிம்மராவின் வாழ்க்கை (அரசியல்) பற்றி எழுதியிருந்த வினய் சீதாபதி பற்றி எதுவும் நான் அறிந்திருக்க வில்லை. இப்புத்தகத்தை எழுதிய அபிஷேக் சவுத்திரி பற்றியும் தான். அப்புத்தகத்தை… Continue reading வாஜ்பாயி – சேற்றில் முளைத்த செந்தாமரை
வனவாசி
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டின் பசுமையைத் தவிர வேறெதுவுமில்லாத சமவெளிக் காட்டில் இருந்தது அந்த ஜமீன் பங்களா. அங்குள்ள பசுமையால் அறுபடாத பௌர்ணமி நிலவின் முழுத்தோற்றத்தை அந்த பங்களாவின் ஜன்னலின் வழியாக தழுவலாம் என்று தோன்றும். மேலும் ஆள் அரவமற்ற அந்த சமவெளியில் அந்த பௌர்ணமி இரவில் குதிரையின் மேலமர்ந்து பயணிக்கும் ஒரு நகரவாசியின் மனநிலை…வனவாசி என்ற பிரசித்தி பெற்ற வங்காள நாவலில் (விபூதிபூஷணின் ஆரண்யக, தமிழில் த.நா.சேனாபதி) வரும் இக் காட்சிகள் ஒரு நகரவாசிக்கு அளிக்கும்… Continue reading வனவாசி
ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டின் பசுமையைத் தவிர வேறெதுவுமில்லாத சமவெளிக் காட்டில் இருந்தது அந்த ஜமீன் பங்களா. அங்குள்ள பசுமையால் அறுபடாத பௌர்ணமி நிலவின் முழுத்தோற்றத்தை அந்த பங்களாவின் ஜன்னலின் வழியாக தழுவலாம் என்று தோன்றும். மேலும் ஆள் அரவமற்ற அந்த சமவெளியில் அந்த பௌர்ணமி இரவில் குதிரையின் மேலமர்ந்து பயணிக்கும் ஒரு நகரவாசியின் மனநிலை…வனவாசி என்ற பிரசித்தி பெற்ற வங்காள நாவலில் (விபூதிபூஷணின் ஆரண்யக) வரும் இக் காட்சிகள் ஒரு நகரவாசிக்கு அளிக்கும் கண நேர… Continue reading ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்
IPL – கிரிக்கெட்டின் நுழைவாயில்
He came down the track and converted that what it supposed to be good length delivery into a full toss, and despatched it to the mid wicket fence… He comes into the line of that in swing delivery to give himeself a room for that extra cover six… It trapped him in the crease infront… Continue reading IPL – கிரிக்கெட்டின் நுழைவாயில்
தேவதேவனின் தையல்
நேற்றையும், நாளையையும் இன்றிலிருந்து பிரித்தெடுத்தது போல் இருந்தது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த கோலம். இன்றால் மட்டுமேயான அம்முகம், கிட்டத்தட்ட காலத்திலிருந்து விடுதலை கிட்டியது போன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆனால், காலம் வலியது. இன்றில் மட்டுமே இருப்பது நிர்வாணத்திற்குச் சமம் என்று அப்புனிதனின் நேற்றும் நாளையுமாகிய கைகளை சிலுவையில் இருந்து பிரித்தெடுத்து அவரின் நிர்வாணத்தை, விடுதலையை காவு வாங்கிக் கொண்டது. கிறிஸ்துவும் வேறு வழியின்றி உயிர்த்தெழுந்தார், மீண்டும் காலத்தில் சிறைபட்டிருக்க; மீண்டும் இப்பாவிகளை நல்வழிப்படுத்த. ஏனோ தெரியவில்லை, ஈஸ்டர்… Continue reading தேவதேவனின் தையல்
அனுபவமும் கலையும்
எழுத்தாளர் என்.ஸ்ரீராம் கதைகளைப் பற்றிய நற்றுணை கலந்துரையாடலில் பேசிய காணொளியும் அதன் உரை வடிவமும். அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த வாய்ப்பினை எனக்களித்த நற்றுணை அமைப்பினருக்கு நன்றி. சிறு வயதில் எனக்குப் பரிட்சயமாயிருந்த ஆறுமுகக் காவடிகளையும், முனி விரட்டிகளையும் என்னுடைய நினைவடுக்களில் இருந்து மேலெலும்பி வரச்செய்த ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி. தமிழ் விக்கி இவ்வுரைக்கான தயாரிப்பின் போது, Google என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்ற இடம் தமிழ் விக்கி தளத்திற்கு. ஒரு ஐந்து நிமிட வாசிப்பில்… Continue reading அனுபவமும் கலையும்
பெயரற்ற யாத்ரீகன்
நதியோட்டத்தில் மிதந்து செல்லும் கிளையில்பாடிக்கொண்டிருக்கின்றனபூச்சிகள், இன்னமும் - கொபயாஷி இஸ்ஸாInsects on a bough/ floating downriver,/ still singing - Kobayashi Issaநிகழ்காலத்தை நீட்டிப்பது அல்லது நிரந்தரமானதாக ஆக்குவது தான் ஜென் கவிதை என்கிறார் இக்கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கிட்டத்தட்ட Living in the present ( கணத்தில் வாழ்வது ) என்ற ஜெகி (ஜெ. கிருஷ்ணமூர்த்தி)யின் ஆப்த வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. நிகழ்காலத்தை நிரந்தரமாக்குவது என்பது, கடந்தவைகளையும்,… Continue reading பெயரற்ற யாத்ரீகன்








