கைவிடப்பட்டவர்களின் புகலிடமாய் மாறியிருந்த அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் பிரவேசிக்கிறார்கள் தேவாவும் ப்ரியாவும். பரந்து விரிந்திருந்த அந்த கட்டிடத்தின் தரைப்பகுதியெங்கும் புதர்மண்டி ஆங்காங்கே சிதிலமடைந்து போயிருந்த திண்டுகளால் நிரம்பியிருந்தது. அக்கட்டிடத்துக்கு கூரையென்ற ஒன்று இருந்ததற்கான தடயம் ஏதுமில்லை என்பதை உணர்ந்தவுடன்தான் புரிந்தது அது கட்டிடம் அல்ல, சுற்றுச்சுவர் மட்டுமே கொண்ட கைவிடப்பட்ட மிகப்பரந்த நிலப்பகுதி என்று. சாலையிலிருந்து ஆறேழு அடி கீழே இருந்த இந்நிலப்பகுதியின் இருளை விலக்கியிருந்தது அன்றைய முழுநிலவு. பௌர்ணமி இ்ரவைத்தவிர வேறு இரவுகளில் அங்கு வெளிச்சத்திற்கான… Continue reading முழுநிலவி்ரவு