விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2

https://muthusitharal.com/2019/01/06/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-d/ முன்பகுதி ராஜ்கௌதமன் - மார்க்ஸியத்திலெழுந்து பின்நவீனத்துவத்தில் துயில்பவர் லீனா மணிமேகலையின் அமர்வுக்குப்பின் அரங்கிலெழுந்த சலசலப்பின் அடர்த்தியைக் குறைத்து இல்லாமலாக்கியது, கொடுக்கப்பட்ட 15 நிமிட இடைவெளி. மீணடுமொருமுறை அங்கிருந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளின் தரிசனத்திற்குப் பிறகு அரங்குக்கு திரும்பியபோது, மேடையில் ஜெமோ வீற்றிருந்தார். இவ்வருட விழாவின் விருது நாயகனான வரலாற்றாய்வாளர், மார்க்சியர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ராஜ்கௌதமன் அவர்களை தன்னுடன் வந்தமருமாறு அழைத்தார் ஜெமோ. ஏன் இந்த அமர்வை ஜெமோ ஒருங்கிணைத்தார் என்பது, அவர்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2

Advertisement

விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 1

https://muthusitharal.com/2018/12/30/விஷ்ணுபுரம்-விருது-விழா-day-1/ முன்பகுதி ஜெமோவுடன் ஒரு காலை நடை ‘ஜெ இப்பத்தான் கீழ போனாரு…’ என்ற சத்தம் முணுமுணுப்பாய் அறையின் கதவு வழியே கசிந்து கொண்டிருந்தது, காலையில் முழிப்புத் தட்டியிருந்தபோது. சடுதியில் கிளம்பி மூன்றாவது தளத்திலிருந்து தரைதளத்திற்கு வந்தபோது, கச்சேரி களைகட்டியிருந்தது. தங்கும் அறைகளிருந்த கட்டிடத்தின் சுவர்களைச் சற்று நீட்டித்துக் கட்டப்பட்ட நீண்ட திண்ணையில் சிலர் அமர்ந்திருக்க, சுற்றிப்பலர் நின்றிருக்க நடுநாயகமாக நின்றிருந்தார் ஜெமோ. காந்தியம், கம்யூனிசம் என்று போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 40 பேரிருந்த அந்த கலந்துரையாடலில் என்னையும்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 1