இது பேட்ஸ்மென்களின் ஆட்டம்

பெரும்பாலும் இந்த உலகக் கோப்பை போட்டிகளைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போது எங்கிருந்து தொடங்குவது என்பதில் அவ்வளவாக குழப்பமிருந்ததில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இதுவரை மறைந்திருந்த விதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த  இந்த இறுதிப்போட்டியை எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை. உடைத்துப் பொங்கும் சாம்பெய்ன் போல ஆச்சரியங்களும், உணர்வுகளும் கொப்பளித்து வழிந்து கிடக்கிறது, கிரிக்கெட்டர்களின் கனவு நிலமான லார்ட்ஸ் மைதானத்தில். சூப்பர் ஓவரிலும் அடித்த ரன்கள் சமமாகும் பட்சத்தில், இழந்த விக்கெட்டுகளை விட, அடித்த பௌண்டரிகளின் அடிப்படையில் மட்டுமே இங்கிலாந்தை… Continue reading இது பேட்ஸ்மென்களின் ஆட்டம்

Advertisement

சாம்ப்பெயின் பாட்டிலின் மூடி

தோனி தன்னுடைய எடையை இவ்வளவு கனமாக இதுவரை உணர்ந்திருக்கமாட்டார் என்றே எண்ண வைத்தது அவருடைய தளர்ந்த நடை. தலயின் தலை பக்கவாட்டில் துவள மனதே இல்லாமல் ஆற்றலிழந்த ரோபோ போல பெவிலியன் நோக்கி நடந்து கொண்டிருந்தார். இந்தியாவிற்கு இன்னொரு முறை உலகக்கோப்பை இறுதிக்குச் செல்லும்  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியது; இனிமேல் இப்படியொரு வாய்ப்பு தனக்கு கிடைக்கப் போவதில்லை என்ற நிதர்சனம்; எப்பொழுதுமே தத்தளிக்கும் இந்தியப்படகை பாதுகாப்பாக கரை சேர்த்து விடும் தோணியாகிய நான், சமீபகாலங்களாக அதைச்… Continue reading சாம்ப்பெயின் பாட்டிலின் மூடி

Come On India…

மலிங்காவை இந்தியர்கள் எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி சவுரவ் கங்குலியும், நாசர் ஹுசைனும் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டுக்குள் அடைபட்ட குருவிகள் மேலெழும்பி பறக்க முயல்வதுபோல் எழும்பி எழும்பி அடங்கும் தங்கச் சாயம் பூசப்பட்ட தலைமுடியும், பேட்ஸ்மென்களை அவர்களது கிரீஷுக்குள்ளேயே சிறை பிடிக்கும் யார்க்கரும்தான் மலிங்காவின் சிறப்பு அடையாளங்கள். இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முதல் ஐவர் பட்டியலில் இருக்கும் ஒரே ஒரு சமகாலப் பந்து வீச்சாளர். தன்னுடைய சிறகுகளுக்கு கூடிய விரைவில் ஓய்வு கொடுத்து… Continue reading Come On India…