தங்களுடைய 'மினி'யாக திரும்பி தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கும் மகளை, தங்கையை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் கனவிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்ததுபோல் முழித்துக் கொண்டிருக்கிறது ஒட்டு மொத்த குடும்பமும். சில தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மினியை வெறுப்பின் உச்சத்தில் உமிழ்ந்து விட்டு வந்திருந்த அவளுடைய மூன்று அண்ணன்களும், 'அவன வெட்டுடா….' என்று தூக்கத்தில் அலறிக் கொண்டு எழுந்து அட மினி இங்க நிக்கறா… அப்ப..அப்போ... அதெல்லாம் கனவா... என்ற பாவனையுடன்… Continue reading பாசமும் அகங்காரமும்