கொங்கைத் தீயும் கொற்றவையும்

தனக்கு பிறர் போற்றும் அழகிருந்தும் அதை உணர்ந்து ஆராதிக்க முடியாத அல்லது அதற்கு தேவையற்ற அப்பெண்ணின் மேல் படர்கிறான் கலாரசிகனான அவளுடைய கணவன். முழு நிலவு போன்ற அவளின் முகத்தில் எச்சலனமும் இல்லை.  கொஞ்சம் எரிச்சலாகி, தன் பார்வையை அவளுடைய முகத்திலிருந்து விலக்கி, புடைத்திருக்கும் கழுத்து, தன்னை அவள்மேல் முழுமையாக படரவிடமால் தடுத்திருக்கும் விம்மிய மார்பு, என உடலின் அனைத்துப் பகுதிகளையும் நோக்குகிறான். செலுமையான அனைத்துப் பகுதிகளும், அவளுடைய முகத்தைப் போலவே சலனமற்று இருப்பதாய் பிரமை கொள்கிறான்.… Continue reading கொங்கைத் தீயும் கொற்றவையும்

Advertisement

புரட்சியும் உலக மறுப்பும்

சமீபத்தில் பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடந்திருந்த 40 கி.மீ மரத்தான் போட்டியை முழுமையாக ஓடி முடித்திருந்த நண்பர், அங்கு வாழும் மனிதர்களின் கவலையும், மகிழ்ச்சியுமற்ற  முகங்களைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தார். ஆரோவில்லைச் சுற்றி பரபரத்துக் கொண்டிருக்கும் மனித அலைகளின் தாக்கமேதுமின்றி, இயங்கும் வட்டத்தின் இயக்கமற்ற மையப்புள்ளி போல் அவர்களிருப்பது தான் ஓடி முடித்ததைவிட சாதனையாக அவருக்குத் தோன்றியது. உடனே, உலக மறுப்பில் விழைந்த    அவர்களுடைய பொறுப்பற்றத் தன்மையை சுட்டிக்காட்ட விரும்பியது என்னுடைய மார்க்சிய மேதாவித்தனம். தமிழ் மார்க்சியர்களான… Continue reading புரட்சியும் உலக மறுப்பும்

முதல் இலக்கிய மேடை

ராஜ் கௌதமனில் தொடங்கிய  மார்க்சிய ஆய்வுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அபுனைவு கட்டுரைகளின் வாசிப்பு,  ந.முத்து மோகன், தேவிபிரசாத் சட்டோபாத்யா என பயணித்து ஆ. சிவசுப்ரமணியம், ராஜேந்திர சோழன், வெங்கடாசலபதி என நீண்டு கொண்டே போய்க் கொண்டிருந்தது. அறிவார்ந்த சமூகங்களால் தவிர்க்கவேப் படமுடியாத இவ்வாளுமைகள்  அனைவரும் எனக்கு அறிமுகமானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் வெவ்வேறு முக்கிய நிகழ்வுகளின் வழியாகத்தான். கிட்டத்தட்ட, இவ்வாசிப்பு புனைவிலிருந்து என்னை வெகுவாக விலக்கி வைத்திருந்தது. ஜெயமோகனின் கிராதம் மட்டுமே இந்த ஓராண்டில் என்னுடன் பயணித்த… Continue reading முதல் இலக்கிய மேடை