முதல்வன் எனும் கனவு

அருகாமையில் உள்ள நகரத்தின் நெரிசல்களை தொலைத்திருந்த அந்த கிராமத்தின் பசுமையை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்து அச்சாலை. நண்பகல் வெயிலும், பசுமையும் சேர்ந்து ஆள் அரவமற்றிருந்த அத்தார்ச் சாலையின் பளபளப்பை மெருகேற்றியிருந்தன. சாலையின் ஒரு முனை முடிவற்று சென்று பசுமையை முழுதும்  போர்த்தியிருந்த பெரிய மலையின் அடிவாரத்தை தொட்டு, அதன் முகட்டிலிருக்கும் தெய்வத்தை நோக்கி பயணிக்க எத்தனிப்பது போலிருந்தது. ரம்யமான இப்பொழுதின் அமைதியை சன்னமாக கிழித்தவாறு புகழேந்தி தன்னுடைய மோட்டார் சைக்கிளில், அந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான். அணிந்திருந்த… Continue reading முதல்வன் எனும் கனவு

Advertisement

மின்சாரக் கனவும் துறவறமும்

பெரும் மழையை, தன் கூம்பின் வழியாக மேகங்களைத் துளைத்து பெய்ய வைத்தது போல் கம்பீரமாக நனைந்து கொண்டிருந்தது அந்த சர்ச். பிரார்த்தனை அறை முழுவதும், சற்று நேரத்திற்கெல்லாம் கன்னியாஸ்திரிகளாக போகிற நவ கன்னியர்களால் நிரம்பியிருந்தது. தனக்கு முன்னால் இருப்பவர்கள் ஒவ்வொருவராக தங்கள் முகத்தில் எந்தவித சலனமும் அற்று தங்களை முழுமனதுடன் ஆண்டவரிடம் ஒப்படைக்க, ப்ரியாவின் மனதில் இருந்த குழப்பம் அவள் முகத்தின் சலனமின்மையை கலைத்திருந்தது. "பிரியா…." என்ற அலறலும் "ப்ரியா அமல்ராஜ்…" என சன்னமாக  குரலும் ஒரே… Continue reading மின்சாரக் கனவும் துறவறமும்