தெய்வங்களும் பாவங்களும்

உடலில் ஊறிக்கொண்டிருக்கும் சாமி எறும்பின் உணர்வைத் தருபவை இயக்குநர் விக்ரமனின் படங்கள். வன்முறை என்றால் அந்த சாமி எறும்பு கடிக்கும் அளவுக்குத்தான் இருக்கும். பெரும்பாலும் நல்லுணர்வுகளான பாசம் ,மரியாதை, பொறுப்புணர்வு, பொறாமை கொள்ளாமை என அனைத்தையும் கலவையாக்கி சிமெண்ட் போல நம்மேல் பூசியனுப்புவார். 90களின் இளைஞர்களிடம் நேர்மறை எண்ணங்களை விதைத்து அவர்களின் ஆளுமையை செதுக்கிய அக்கறையுள்ள இயக்குநர். இப்படிப்பட்ட படங்களின் தேவைகள் இப்போது குறைந்து விட்டனவா என்ன? இப்போதுள்ள பெரும்பாலான படங்கள் “நீ பச்சை தமிளேண்டா ஷேர்… Continue reading தெய்வங்களும் பாவங்களும்

Blockchain – ஒரு நம்பிக்கைப் புரட்சி

“வங்கிகள் மறைந்து நேர்மையானவர்களே தனி வங்கிகளாவார்கள்.” “நிலப்பதிவு அலுவலங்கள் மறைந்து நேர்மையானவர்களே தனி நிலப்பதிவாளர்களாவார்கள்” இப்படி ஆரம்பித்து நீண்டு கொண்டே போகிறது, கூடிய விரைவில் காணாமல் போகக்கூடியவைகளின் பட்டியல். நம்பிக்கையாக பரிவர்த்தனைகளை நம்மிடையே நிகழ்த்திக்கொள்ள நாம் ஏற்படுத்திக் கொண்ட அனைத்து பெரு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் என்னால் கரைத்து இல்லாமலாக்கி விட முடியுமென்று மார்தட்டி நிற்கிறது வளர்ந்து வரும் புது தொழில்நுட்பமான 'Blockchain '. இணையத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல் இது என்கிறார்கள் வல்லுநர்கள். இணையம் தகவலை பரவலாக்கியதென்றால், Blockchain… Continue reading Blockchain – ஒரு நம்பிக்கைப் புரட்சி

சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave

  எழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரதம் பற்றிய வெண்முரசு நாவல்கள் வரிசையில் தருமனுக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட நாவல் ‘சொல்வளர் காடு’. கௌரவர்களுடனான சூதில் அனைத்தையும் இழந்த தருமன், திரௌபதியுடனும் தன் சகோதர்களுடன் காடேகிச் (வனவாசம் ) செல்கிறான். அவர்களினூடாக நம்மையும் பயணிக்க வைக்கிறது இந்நாவல்.    சொல்வளர் காட்டை தருமனின் ஊதியமில்லா நீண்ட நாள் விடுப்பு ( sabbatical leave) என்று தான் நான் உருவகித்துக் கொள்கிறேன். பெரு நிறுவனங்களின்  தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் குழப்பங்களும் அது… Continue reading சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave

சந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு

சந்தோஷ் சுப்ரமணியம். கிட்டத்தட்ட நூற்றி xவது தடவையாக தொலைக்காட்சியில். நானும் பார்ப்பது கிட்டத்தட்ட பதிxஆவது தடவை. பத்து வயதான என் பொண்ணும் கடந்த இரண்டாண்டுகளாக எப்போது போட்டாலும் இந்தப் படத்தை கைகொட்டி சிரித்து ரசிக்கிறாள். நானும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த நேர்த்தியான இறுதிக்காட்சிகளை தவறவிடுவதில்லை. இப்போது தான் நமக்கு கொஞ்சம் எழுத வருகிறதே என்ற உந்துததில் இப்படம் பற்றிய என்னுடைய அவதானிப்புகள் இவை. மிகவு‌ம் சிரத்தையுடன் எடுக்கப்படும் இறுதிக்காட்சிகள் நம்மையும் திரைக்குள்… Continue reading சந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு

பெரியாரும் பெரியவரும்

சமீபத்தில் நடந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழா கௌசல்யா சங்கரை மேடையேற்றியிருந்தது. பெண்களின் காதல் தோழனான கேசத்தை கழுத்து வரை ஒட்ட வெட்டியிருந்தார். உயிர்க் காதலனின், கைப்பிடித்த கணவனின் இழப்பிற்கு பின் இது எதற்கு என்பதுபோல. அணிந்திருந்த உடையும், அதற்கேற்ற பாவனையும் இயல்பாகவே வந்திருந்தது கௌசல்யாவிற்கு. சன்னமான, அதே சமயத்தில் தீர்க்கமான அந்த பேச்சின் குரலில் சங்கரின் குருதி கண்ட நாளின் நினைவுகளை கடந்து சங்கரை மட்டும் இன்னும் சுமந்து கொண்டிருப்பது தொனித்தது.   ஆணவக் கொலைகளுக்கு… Continue reading பெரியாரும் பெரியவரும்

ஒரு சிறுகதையும் வாசிப்பும்

வாசிப்பு ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது? காட்சி ஊடகங்களைப் போலில்லாமல் வாசிப்பிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவை என்பதாலா? இல்லை, கொஞ்சம் கற்பனை தேவை என்பதாலா? இவ்விரண்டையும் விட எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று அகப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி சொட்டு ஆர்வத்தையும் வடிந்து விடச் செய்கின்றனவா?. பெரும்பாலும் சுவாரஸ்யமின்மையே நம்மை வாசிப்பிலிருந்து விலக்கி வைக்கிறது எனலாம்.   இந்த சுவாரஸ்யம் எழுதுபவனால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. வாசகனின் மெனக்கெடலும் கற்பனையும் அதற்கு மிக அவசியம். ஒரே கதை தான், ஆனால் வாசிப்பவர்களின் அனுபவங்களைப்… Continue reading ஒரு சிறுகதையும் வாசிப்பும்

ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்கெட்ச் போட்டு விக்ரமையும் தமன்னாவையும் சினிமாத்துறையிலிருந்து தூக்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். விக்ரம் எப்போதும் ஒரு மெனக்கெடல்களின் மனிதர். அவர் பெயரைக் கேட்டவுடன் கண்முன் வரும் அந்த உழைப்பு தான் அவர் படங்களுக்கான ஈர்ப்பு. ஆனால் சென்ற வேகத்திலேயே சுவற்றிலடித்த பந்தாய் நம்மை  திரை அரங்கத்தை விட்டு வெளியேற வைக்கின்றன, அவருடைய சமீபத்திய படங்கள். ஸ்கெட்சும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் இன்னும் இளமையாய் தான் இருக்கிறேன் என்றுணற்துவதற்காகவே  வேறு எந்தவிதமான மெனக்கெடல்களும் இல்லாத… Continue reading ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள்

சமீபத்தில் என் ஆதர்ச எழுத்தாளர் ஜெமோ (ஜெயமோகன்) சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டுக்காக வந்தபோது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அச்சந்திப்பு பற்றி அவருக்கெழுதிய கடிதம் இது. ஜெமோ, மீண்டுமொரு படபடப்பு தொற்றிக் கொண்டது.  இரண்டாவது முறையாக உங்களை நேரில் சந்திக்கப்போவதை நினைத்து. முதல் தடவை குமரகுருபனின் நினைவு விருது விழாவில். இப்போது உங்கள் ஓவிய (ஓவியமான அல்ல) நண்பர் சீனிவாச நடராஐனின் ‘அச்சப்பட தேவையில்லை’ நூல் வெளியீட்டு விழாவில். ஆனால் முதல்தடவை போல் எனது… Continue reading எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள்

2018 – பயணங்களும் இலக்குகளும்

“எதுக்கு வேணாலும் தரகர் வச்சுக்கலாம்டா...ஆனா...காதலுக்கு மட்டும் கூடவே கூடாது மாப்ள….” கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு மின்சாரகனவை பார்த்தபோது கிடைத்த ஞானம். ஆனால் சமீபத்தில் மீண்டும் பார்த்தபோது கிடைத்த ஞானமே வேறு. இருக்காதா பின்ன...எலக்கியம்லாம் இப்ப நிறைய படிக்கிறோம்ல..   கடவுளைத் தேடிய பயணத்தில் கஜோல் கண்டடைந்தது தன் காதலை. காதலைத் தேடிய பயணத்தில் அரவிந்த்சாமி கண்டடைந்தது கடவுளை.   ஹெகல் போன்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளையும்; புத்தர், ஆதி சங்கரர் போன்ற கீழை நாட்டு… Continue reading 2018 – பயணங்களும் இலக்குகளும்

வேலைக்காரன் – எனது பார்வை

இது சமூக அவலங்களுக்கான சீசன் போலும். அறம், அருவி வரிசையில் வேலைக்காரன். நல்லவேளையாக பேய் சீசன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.   அறம், அருவி போல் சொல்ல வந்த அவலங்களை கச்சிதமாக சொல்லாவிட்டாலும், அவலங்களுக்குரிய முக்கிய காரணமான நம்முடைய சொரணமின்மையை  சுட்டிக் காட்டி அதற்கான எளிய தீர்வையும் முன்வைத்த விதத்தில் வேலைக்காரன் கவனிக்கப்பட வேண்டிய படமே.   முன்னேறுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போன அல்லது மறுக்கப்பட்ட ஒரு குப்பத்திலிருக்கும் ஒரு படித்த இளைஞனின் சுய முன்னேற்றத்திற்கான பயணம்… Continue reading வேலைக்காரன் – எனது பார்வை