உழைப்பின் கொண்டாட்டம் – Part 2

https://muthusitharal.wordpress.com/2017/12/20/உழைப்பின்-கொண்டாட்டம்-part-1/?preview=true தொடர்ச்சி.... மதிய உணவு முடித்து அடுத்த நிகழ்வுக்கான இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் தான் அந்த resortன் பசுமையும் பிரமாண்டமும் ஆச்சரியப்பட வைத்தன. நிறைய பேர் அதில் மயங்கி உறைந்து நின்று கொண்டிருந்தார்கள் தங்கள் கைபேசியின் முன். அவர்களுக்கான புதிய முகப்பு புகைப்படம் (profile picture) தயாராகிக் கொண்டிருந்தது. மிக நேர்த்தியாக பேணப்பட்டிருந்தது அங்கிருந்த பசுமை. ஆனால், சூழலியளாலர்களை (environmentalist) கேட்டால், ஏற்கனவே அங்கிருந்த பசுமையை சிதைத்துத் தான் இந்த resortஏ எழுப்பப்பட்டுள்ளது என்பார்கள் வழக்கம்போல.… Continue reading உழைப்பின் கொண்டாட்டம் – Part 2

உழைப்பின் கொண்டாட்டம் – Part 1

புதிதாக ஒரு whatsup groupல் இணைக்கப் பட்டதாக சிணுங்கியது கைப்பேசி. சனிக்கிழமை காலை நேரம். Week endல இன்னுமொரு groupஆ(அக்கப்போரா) என பீதியுடன் கைப்பேசியின் தொடுதிரையை விலக்கினேன். Bus route 9 என்ற பெயர் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. Adminஐ தேடி கண்டுபிடித்ததில் பிரேர்னா என்றிருந்தது. நினைத்தது போலவே officeல இருந்து தான் இந்த group உருவாக்கப்பட்டிருந்தது.   ‘செய்வன திருந்தச்செய்’ என கடும் சிரத்தையோடு ஒரு குழு இதற்கு பின்னால் உழைத்துக் கொண்டிருப்பது அப்போது தான் எங்களுக்கு… Continue reading உழைப்பின் கொண்டாட்டம் – Part 1

நுகர்வும் மார்க்ஸியமும்

நுகர்வு கலாச்சாரம் தனக்கான குழியை தானே தோண்டிக் கொள்ளுமென்றார் கார்ல் மார்க்ஸ். நுகர்தல் பொருட்கள் மேல் அளவில்லாப் பற்றுக் கொள்ளச் செய்து, தான் கடலில் விழ நேர்ந்தாலும் தன் ஐபோனை கரைநோக்கி வீசிவிட்டு விழும் உன்னதமான நுகர்வோர்களை உருவாக்கி வைத்திருக்கிறது.   மாரக்ஸியத்தின் அறிமுகம் அதன் குறைகளை ஆராயும் ஜெயமோகனின் நாவலான பின்தொடரும் நிழலின் குரல் வழியாகத்தான் எனக்கு கிடைத்தது. மார்க்ஸின் காலகட்டத்தில் ஓங்கியிருந்த கருத்து முதல்வாதக் கொள்கைக்கு எதிராக மார்க்ஸ் முன்வைத்த பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக்… Continue reading நுகர்வும் மார்க்ஸியமும்

பருந்தும் தமிழகமும்

  என்னதான் முதிர்ச்சியடைந்த மனமென்றாலும், உருமாறியிருந்த அந்த முகம் சந்தனபேழையினுள் இட்டு மூடப்படும்போது அதுவரை இமையெனும் அணையால் தடுக்கப்பட்டிருந்த கண்ணீர் அவ்வணையை உடைத்துக் கொண்டு வழிந்தோட ஆரம்பித்தது.   காலம் பருந்து போல பறந்து விட்டிருக்கிறது. அந்த இரும்பு மனுஷி பருந்தாய் நம்மை அடைகாப்பதை நிறுத்தி ஒரு வருடம் ஆகியிருக்கிறது. என்னதான் கொத்திக் குதறினாலும் நம்மை அடைகாத்தது அந்த அம்மையார் தான்.   எப்போது இந்த பருந்து தலைசாயுமென  வானத்தில் வட்டமடித்து காத்துக்கொண்டிருந்த பல பருந்துகள் கீழிறங்கி… Continue reading பருந்தும் தமிழகமும்

A week day Evening at a Music Bar

ஜுவாலையே இல்லாமல் சுட்டெரிக்கும் நெருப்பாய் வெயில் மாலை நேரத்தைப் பொசுக்கிக்கொண்டிருந்தது. (சென்னையின் கோடைக்கு காலையும் மாலையும் ஒன்று தான்). சில்லென்று வருடிச் செல்லும் காற்று ஒரு வரமென்றால், அதைவிட வரம் சில்லென்ற ஒரு Beer . இவ்விரண்டையும் வேண்டி நகரில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டிருந்த music barல் தஞ்சமடைந்தேன்.   வழக்கம்போல் இருள் கவிழ்ந்திருந்தது barன் உள்ளே. ஆங்காங்கே சக்தி குறைந்த விளக்குகள் மெல்லிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. பல மெல்லிய பேச்சுக் குரல்கள் ஒன்றினைந்து வல்லிய உளறல்களாக… Continue reading A week day Evening at a Music Bar

விதையும் மனிதனும்

  அழுத்தம் (stress) இருந்து கொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது முன்னகர்வதற்கும், அடைந்த இடத்தை தக்கவைப்பதற்கும்.   மண்ணின் செறிவும் அழுத்தமும் தான் வளரத் துடித்த  விதை வளர்ந்ததிற்கும்,  அது வளர்ந்து  மரமாய் நீடித்திருப்பதிற்கும் காரணம்.  ஆக அழுத்தம் விதைக்கு அழுத்தமாய் தெரிவதில்லை. அது ஒரு இழுத்துக்  காக்கும் சக்தி மட்டுமே.   பொறாமையால் வளரத் துடிக்கும்  மனிதர்களுக்கு கிடைக்கும் அழுத்தங்கள் அழுத்தங்களே. இவற்றை நாம் இயல்பாக கடக்க முடிவதில்லை. அவை ஒரு போதும் வளர்ச்சிக்கு இழுத்து செல்வதில்லை.… Continue reading விதையும் மனிதனும்

கமலும் தலைவனும் தமிழகமும்

“யார் கடவுள்? “ என்ற கேள்விக்கு தன்னுள் (வுள்) கடந்து சென்றவன் தான் என அத்வைத (ஆதிசங்கரரின் தத்துவம்) டச் கொடுத்திருக்கிறார் கமல். தி இந்து தமிழ்ப் பத்திரிக்கையின் 5வது ஆண்டு தொடக்க விழாவில்.   அழகான, புத்திசாலியான துணை வேண்டும் என்ற  இளையவர்களின் தவிப்பைப்போல; நொடித்து படுத்துவிட்ட  குடும்பத்தை சுற்றத்தார் மெச்ச தூக்கி நிறுத்தும் ஒரு வாரிசு வேண்டி தவிக்கும் குடும்பத்தைப் போல; இழந்து தரையில் வீழ்த்தப்பட்டிருக்கும் தமிழனின் பெருமையை மீட்டெடுக்க ஒரு தலைமை வேண்டி… Continue reading கமலும் தலைவனும் தமிழகமும்

டங்கலும் பெண்ணியமும்

அமேசானில்   முன்பதிவு செய்த டங்கல் தமிழ்   டிவிடி அந்தா இந்தா என்று ஒரு மாதம் கழித்து வந்து சேர்ந்தது. பட் இட்ஸ் வொர்த் எ வெயிட்.   பல தலைசிறந்த இயக்குனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது, எதை படத்தின் முதல் காட்சியாக வைப்பது அல்லது முதல் காட்சியை எப்படி எடுப்பது என்பது தான்.   இந்த தலைவலி சிறந்த எழுத்தாளர்களுக்கும் உண்டு. முழுக்கதையையும் எழுதி முடித்து விட்டு, முதல்வரிக்காக முடிவில்லாமல் தவமிருக்கும் அவஸ்தை. "என் மாமியாரிடம் கேட்டுட்டுத்தான்… Continue reading டங்கலும் பெண்ணியமும்

வாசிப்பும் எழுத்தும்

  காற்றில் மிதப்பது போல் உள்ளது. என்னுடைய இரு கடிதங்கள் இன்று எழுத்தாளர் ஜெமோவின் (ஜெயமோகன்) இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது முதல் தடவை இல்லையென்றாலும், ஒவ்வொரு தடவையும் இந்தப் பரவசம் மட்டும் முளைத்து கொண்டே இருக்கிறது.   தொடர்பு கொள்ளலென்பது (communication) உணர்வுருவங்களாகவும் (emojis), விருப்பங்களாகவும்(likes) மற்றும் ஓரிருவரி பின்னூட்டங்களாகவும்(comments) சுருங்கி விட்ட சமூகவலைத் தொடர்பு மிகுந்திருக்கும் நவீனச் சூழலில், கடிதமா? இந்த காலத்திலா? அதுவும் எழுத்தாளருக்கா? எனற கேள்விகள் முடிவில்லாமல் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.  … Continue reading வாசிப்பும் எழுத்தும்

சாதி வர்க்கம் நீட்டு – பகுதி 2

https://muthusitharal.wordpress.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/?preview=true (பகுதி ஒன்றின் சுட்டி) ஏன் சாதி இந்த பூட்டிற்கான அவசியமென்ன? ஏன் வர்க்கங்களாக ஒற்றுமையாக இருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். மார்க்ஸியத்தின் வரலாறு எவ்வாறு இயங்கி முன்னகரும் என்பதைக் கொண்டு இதை புரிந்து கொள்ள முயல்கிறேன். தொடரும்...... தொடர்ச்சி..... பேரரசுகளின் தோற்றம்   பேரரசுகளின் உருவாக்கத்திற்கும் சாதியின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. குறுநில அரசுகளாக இருந்தபோது வர்க்கங்களுக்கிடையே போட்டிமனப்பான்மையோ அதன் பொருட்டு விளையும் வேற்றுமைகளோ பெரிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை.  … Continue reading சாதி வர்க்கம் நீட்டு – பகுதி 2