அணைந்திருந்த கைப்பேசியின் தொடுதிரையை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டு தட்ட, அப்போதுதான் அணைந்திருந்த திரை உயிர்பெற்றுக் கொண்டது. அணையும் முன்னர் கூகுள் வழிகாட்டியோடு ஒன்றிப் போயிருந்தேன், சென்னையின் வெள்ளிக் கிழமை முன்னிரவின் சிடுக்கில்(traffic) சிக்கிக் கொண்டு. எறும்பாய் ஊறிக்கொண்டிருந்தது….இல்லை நத்தையாய் நகர்ந்து கொண்டிருந்தது நான் பயணித்துக் கொண்டிருந்த நாலிருளியுந்து (car). மின்தொடர்வண்டியைப் (electric train) பிடித்துவிட முடியுமா என்ற கவலையோடு சற்று தலை தூக்கி ஆடியின் (கண்ணாடி) வழியாக வெளியுலகை நோக்கினேன். தானியங்கி துடைப்பான்… Continue reading வெள்ளியில் கண்டடைந்த தங்கம்