Notting Hill – An Art of story telling

பெண்களுக்கு பிடித்த நிறமாகச் சொல்லப்படும் பளீரென்ற இளஞ்சிவப்பு நிறச் சட்டை. எந்த மெனக்கெடலும் இல்லாமல், அதோடு எளிதாகப் பொருந்திப் போகும் கருப்பு நிற பேண்ட் மற்றும் கோர்ட். கன்னங்கள் சற்று ஒடுங்கி உள்வாங்கி, நாடியாய் நீண்ட உறுதியான சிவந்த அந்த பளிச் முகம், அவன் அணிந்திருக்கும் சட்டையை மட்டுமல்ல அவன் முன் நிற்கும் பெண்களையும் சற்று நாண வைக்கும். அப்படி நாணிய ஒரு பெண்ணின் அழைப்பை ஏற்று அவள் தங்கியிருக்கும் உயர்தர ஹோட்டலுக்குச் செல்கிறான். துரதிர்ஷ்டவசமாய், அவளால் வேண்டா வெறுப்பாய் சேர்த்துக் கொள்ளப்பட்ட காதலனும் அவ்வறையில் இருக்கிறான். வேறு வழியின்றி இவன் Room Service ஆக்கப்பட்டு அவர்கள் கொரித்துப் போட்டிருந்த உணவுத் தட்டுக்களையும், குப்பைகளையும் கையிலேந்தி அவ்வறையை விட்டு வெளியேறி நடக்கிறான். பிண்ணனியில் மென் சோகம் கலந்த ஒரு இசை அவர்களிருவருக்குமாக ஒலிக்கிறது. முதல் சந்திப்பே கோணலாகிப் போக, காலம் இதை எப்படிச் சரி செய்து கொண்டு அவர்களை இணைய வைக்கிறது என்ற சாதாரண கதையை அசாதாரமான திரைமொழியுடன் சொல்லியிருக்கிறது NOTTING HILL.

சலனமற்ற உள்ளொடுங்கிய அந்த கண்களும், தன்னுடைய மனைவி, Harrison Ford போன்ற ஒருவனுடன் சென்று விட்டதாக கூறும் சுய எள்ளல் கலந்த பச்சாதாபமும், மனச்சோர்வும் Hugh Grand தாழ்வுமனப்பான்மை எனும் புதைகுழியில் ஆழ்ந்து கொண்டிருப்பதை உணர்த்துகிறது. அவனைச் சுற்றியிருக்கும் அனைவருமே இது போன்ற ஒரு புதைகுழியில் சுகமாக வாழப் பழகிக் கொண்டவர்கள் அல்லது தங்களை ஏதோ ஒரு வகையில் கைவிட்டவர்கள். அப்புதைகுழி தங்களை இழுக்காத போதெல்லாம், அதற்கு வெளியே உள்ள உலகத்தை ஏக்கத்தோடு பார்த்து, அந்த எடையை தாங்கமுடியாமல் தாங்களே We are not enough என்ற அக்குழியில் புதைந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

புகழ்பெற்ற சினிமா நடிகையாகவே நடித்திருக்கும் Julia Robertsன் வருகை இவர்களின் வாழ்க்கையில் ஒரு இனம்புரியாத மகிழ்வைக் கொண்டு வருகிறது. குறிப்பாக Hugh Grandன் வாழ்வில். தன்னுடைய திறமைக்காகவும், வெற்றிக்காகவும் விரும்பியே தன்னைச் சுற்றித் தனக்கு விருப்பமில்லா ஒரு இரும்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் Julia Roberts. கிரிக்கெட் வீரர்கள் விரும்பாவிட்டாலும் ஜிம்மிற்கு சென்றாக வேண்டும் என்பதைப் போல. இவ்வளையத்தின் இறுக்கத்திலிருந்து தன்னை அவ்வப்போது ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஒரு வேளையில் தான் Hugh Grandன் பயணப் புத்தகங்கள் விற்கும் கடைக்கு வருகிறார்.

My home is just around என்று இரைஞ்சி தன்னை அங்கு வரச் சொல்லும் Hugh Grandடிடம், OK what is that AROUND, give me in YARDS என்று கேட்கும் மிடுக்குத்தனம். உன் உதட்டில் கிடைத்த முத்தத்தைப் பற்றி  யாருக்கும் சொல்ல வேண்டாம் என்ற அதே மிடுக்குத்தனமான வேண்டுகோளுக்கு, No…no, I won’t even tell to myself. Even if I tell to myself, I won’t believe it என்ற Hugh Grandன் நகைச்சுவை கலந்த சுயபச்சாதாபம்.  இவ்விரு கதாபாத்திரங்களின் இக்குணநலன்கள் வெளிப்படுத்தப்பட்ட விதம் தான் இப்படத்தின் மேல் ஏற்படும் ஈர்ப்பிற்கு காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது, கடந்த 15 ஆண்டுகளில் பலமுறைப் பார்த்திருந்தாலும்.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s