இருண்ட அந்த குளிரூட்டப்பட்ட அரங்கின், கீழிருந்த மேடையின் கூரை விளக்கொன்று மொட்டவிழ்ந்து பூ மலர்வது போல மிக மெதுவாக உயிர்பெறுகிறது. அந்த விளக்கின் மங்கிய மஞ்சள் நிற வட்டவடிவ ஒளி இருளில் அம்மேடையில் தொழுது கொண்டிருந்த வயதான ஔரங்கசீப்பை அவ்வரங்கிலிருந்த பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. அச்சதுர வடிவான மேடையின் நட்டநடுவில் விழுந்திருந்த அந்தச் சிறு வட்டவடிவ ஒளியைத்தவிர, மேடையின் பிற பகுதிகளும், பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியும் நிசப்தமான இருளில் இருந்தது. நபிகள்தான் ஔரங்கசீப்பின் இருளைப்போக்க அவ்வெளிச்சத்தை அனுப்பியிருக்கிறாரோ… Continue reading ஔரங்கசீப்-வெறுப்பிலெழும் தனிமை
Author: muthusitharal
வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம்
நாகரீக வளர்ச்சிக்கும் உடலுழைப்புக்குள்ளும் உள்ள தொடர்பை பற்றி புரிந்து கொள்வதற்காக எழுதும் ஒரு பதிவிது. வழக்கம் போல் நான் இதுவரை தெரிந்து வைத்திருக்கும் மார்க்ஸியத்தைத் தான் இதற்கு துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது. உடனே இது தீவிர கருத்துமுதல்வாதிகளுக்கு அல்லது தற்போதைய சமூகத்தின் வர்க்கப் பிரிவினை இயற்கையானது அல்லது இயல்பானது என்று எண்ணுவோருக்கு அல்லது முதலாளித்துவத்திற்கு எதிரான பதிவென்று எண்ண வேண்டாம். மூன்று சமூக அமைப்புகள் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால சமூகங்களை முறையே… Continue reading வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம்
தமிழும் தத்துவமும்
தமிழ் சமூகத்திடமிருந்து இவ்வுலகுக்கு வழங்கப்பட்ட தத்துவம் ஏதும் உண்டா? என்ற கேள்வி தத்துவங்களின்மேல் சமீபகாலமாக மோகம் கொண்டதிலிருந்தே அலைக்கழிக்கும் ஒன்று. பெரும்பாலும் தத்துவங்களின் அறிமுகம் தத்துவவியல் பயில்பவர்களைத் தாண்டி இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே உள்ளது. அதிலும் வணிக எழுத்துக்களைத் தாண்டி வாசிக்கும் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே இந்த அறிமுகம்கூட சாத்தியம். பெரும்பாலும் தத்துவங்களைப் பயிற்றுவிக்கும் அனைத்து அமைப்புகளுமே நவீனத்தின் பெயரால் சிதைக்கப்பட்டு, இன்று எஞ்சியிருப்பவை அத்தத்துவங்களை குறியீடாகக் கொண்ட சடங்குகளை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகள் மட்டுமே. ஏன்… Continue reading தமிழும் தத்துவமும்
Super Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு
மடிப்புக் கலையாத சேலையுடன், கருத்த இடுப்பின் இரு மடிப்புகள் மினுக்க காரிலிருந்து இறங்குகிறாள் மாணிக்கம். முகத்தில் அப்பியிருந்த சாந்தையும், உதட்டிலிருந்த சாயத்தையும் தாண்டி மாணிக்கத்தின் கருமை அடர்த்தியாய் இருந்தது. அவளின் மூக்கைத் துளைத்திருந்த வளையமும், தலையில் போர்த்தியிருந்த சுருள்கேசமும், கண்களில் தெரிந்த நாணமும், ஒட்டுமொத்த முகத்திலிருந்த பொலிவும், அளந்து எடுத்து வைக்கப்பட்ட தப்படிகளும் என்னிடமும் பெண்மையிருக்கிறது, இதுதான் என் இயல்பு என்பதை வாய் திறக்காமலேயே இவ்வுலகத்திற்கு உரக்கச் சொல்வதாய் இருக்கிறது. இதை சாத்தியப்படுத்தி இருப்பது விஜய் சேதுபதியின்… Continue reading Super Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு
முழுநிலவி்ரவு
கைவிடப்பட்டவர்களின் புகலிடமாய் மாறியிருந்த அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் பிரவேசிக்கிறார்கள் தேவாவும் ப்ரியாவும். பரந்து விரிந்திருந்த அந்த கட்டிடத்தின் தரைப்பகுதியெங்கும் புதர்மண்டி ஆங்காங்கே சிதிலமடைந்து போயிருந்த திண்டுகளால் நிரம்பியிருந்தது. அக்கட்டிடத்துக்கு கூரையென்ற ஒன்று இருந்ததற்கான தடயம் ஏதுமில்லை என்பதை உணர்ந்தவுடன்தான் புரிந்தது அது கட்டிடம் அல்ல, சுற்றுச்சுவர் மட்டுமே கொண்ட கைவிடப்பட்ட மிகப்பரந்த நிலப்பகுதி என்று. சாலையிலிருந்து ஆறேழு அடி கீழே இருந்த இந்நிலப்பகுதியின் இருளை விலக்கியிருந்தது அன்றைய முழுநிலவு. பௌர்ணமி இ்ரவைத்தவிர வேறு இரவுகளில் அங்கு வெளிச்சத்திற்கான… Continue reading முழுநிலவி்ரவு
கடல்கன்னியுடன் ஒரு நாள்
கடற்கரையைச் சார்ந்து வாழும் நெய்தல் நிலத்தைச் சார்ந்த பரதவர்களின் (மீனவர்களின்) சிதிலமடைந்த கோயில் போலிருந்தது அந்த கற்கட்டிடமும் அதிலிருந்த சிற்பங்களும். நிறைய சதுர வடிவ அறைகளைக் கொண்டிருந்த அக்கற்கட்டிடத்தில் நீள்வட்ட வடிவில் ஒரு பெண்முகம். சாந்தமும் ஏளனமும் கலந்த கயல்விழியும், நீண்ட மூக்குமாய் நீண்டு செழுமையான மார்பகங்களோடு பாதியில் முடிவடைந்திருந்தது அச்சிற்பம். அக்காலப் பரதவர்களின் பெண் தெய்வமாக இருக்கலாம் என்று பார்வையைச் சற்று தாழ்த்தியபோது கடல்கன்னி நக்கலோடு புன்னகைத்துக் கொண்டு தனது வலது முழங்கையைத் தரையில் ஊண்டி… Continue reading கடல்கன்னியுடன் ஒரு நாள்
ஒரு செவ்வியல் உரை
ஒரு செவ்வியல் (Classic) நாவல் போல உரையையும் அமைத்துக்கொள்ள முடியுமென்று நிரூபித்துக் காட்டுவதற்காகவே ‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் தன்னுடைய பேருரையை ஆற்றியிருக்கிறார் சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன் (ஜெமோ). அறிவுச்செயல்பாடுகளிலிருந்து நீண்டகாலமாக விலகியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், கிட்டத்தட்ட ஒரு 3 மணி நேரம் தொய்வேயில்லாமல் இலக்கியத்தை மட்டுமே தன்னுடைய அறிதலாகக் கொண்ட ஒருவரால் இத்தலைப்பில் ஒரு உரையை ஆற்றமுடியுமா? அதை தலைக்கு 300 ரூபாய் கட்டி ஒரு 300 பேர் ஆழ்ந்தமர்ந்து கேட்டுணரமுடியுமா?… Continue reading ஒரு செவ்வியல் உரை
விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2
https://muthusitharal.com/2019/01/06/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-d/ முன்பகுதி ராஜ்கௌதமன் - மார்க்ஸியத்திலெழுந்து பின்நவீனத்துவத்தில் துயில்பவர் லீனா மணிமேகலையின் அமர்வுக்குப்பின் அரங்கிலெழுந்த சலசலப்பின் அடர்த்தியைக் குறைத்து இல்லாமலாக்கியது, கொடுக்கப்பட்ட 15 நிமிட இடைவெளி. மீணடுமொருமுறை அங்கிருந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளின் தரிசனத்திற்குப் பிறகு அரங்குக்கு திரும்பியபோது, மேடையில் ஜெமோ வீற்றிருந்தார். இவ்வருட விழாவின் விருது நாயகனான வரலாற்றாய்வாளர், மார்க்சியர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ராஜ்கௌதமன் அவர்களை தன்னுடன் வந்தமருமாறு அழைத்தார் ஜெமோ. ஏன் இந்த அமர்வை ஜெமோ ஒருங்கிணைத்தார் என்பது, அவர்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2
விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 1
https://muthusitharal.com/2018/12/30/விஷ்ணுபுரம்-விருது-விழா-day-1/ முன்பகுதி ஜெமோவுடன் ஒரு காலை நடை ‘ஜெ இப்பத்தான் கீழ போனாரு…’ என்ற சத்தம் முணுமுணுப்பாய் அறையின் கதவு வழியே கசிந்து கொண்டிருந்தது, காலையில் முழிப்புத் தட்டியிருந்தபோது. சடுதியில் கிளம்பி மூன்றாவது தளத்திலிருந்து தரைதளத்திற்கு வந்தபோது, கச்சேரி களைகட்டியிருந்தது. தங்கும் அறைகளிருந்த கட்டிடத்தின் சுவர்களைச் சற்று நீட்டித்துக் கட்டப்பட்ட நீண்ட திண்ணையில் சிலர் அமர்ந்திருக்க, சுற்றிப்பலர் நின்றிருக்க நடுநாயகமாக நின்றிருந்தார் ஜெமோ. காந்தியம், கம்யூனிசம் என்று போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 40 பேரிருந்த அந்த கலந்துரையாடலில் என்னையும்… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 1
விஷ்ணுபுரம் விருது விழா – Day 1 Part 2
https://muthusitharal.com/2018/12/25/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-da/ முன்பு நரன்- சாம்ராஜ் - ஒரு 'அற்புதக்' கூட்டணி சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் இருக்கும் வாசகர் பரப்பு கவிதைகளுக்கு ஏன் இல்லை என்ற கேள்விக்குப் பதிலாக, கவிதை வாசகனின் அதீத உழைப்பைக்கோரும் இலக்கிய வடிவம். இந்த அறிவியக்கச் செயல்பாடு காரணமாகத்தான் பெரும்பாலான வாசகர்கள் கவிதையிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்றார் சாம். அது சரி வலுவுள்ளவர்கள் தானே வைரம் வாங்கமுடியும் என்றெண்ணியபோது, அறிவியக்கவாதிகளான புரோலட்டேரியன்களை (கம்யூனிச தோழர்கள்) அற்புதமாய் ‘அற்புதம்’ என்ற அவர்களுடைய வார்த்தையை வைத்தே கலாய்த்துவிட்டார். https://muthusitharal.com/2018/12/25/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-da/ ‘அற்புதம்’… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா – Day 1 Part 2









