பருந்தும் தமிழகமும்

images (10)

 

என்னதான் முதிர்ச்சியடைந்த மனமென்றாலும், உருமாறியிருந்த அந்த முகம் சந்தனபேழையினுள் இட்டு மூடப்படும்போது அதுவரை இமையெனும் அணையால் தடுக்கப்பட்டிருந்த கண்ணீர் அவ்வணையை உடைத்துக் கொண்டு வழிந்தோட ஆரம்பித்தது.

 

காலம் பருந்து போல பறந்து விட்டிருக்கிறது. அந்த இரும்பு மனுஷி பருந்தாய் நம்மை அடைகாப்பதை நிறுத்தி ஒரு வருடம் ஆகியிருக்கிறது. என்னதான் கொத்திக் குதறினாலும் நம்மை அடைகாத்தது அந்த அம்மையார் தான்.

 

எப்போது இந்த பருந்து தலைசாயுமென  வானத்தில் வட்டமடித்து காத்துக்கொண்டிருந்த பல பருந்துகள் கீழிறங்கி மிக இலாவகமாக நம்மை அலகால் கவ்வி, சாதுர்யமாக  தன் காலிடுக்கிற்கு கடத்தி மேலெழுந்து தங்கள் இலக்கை நோக்கி வெகு வேகமாக பறந்து கொண்டிருக்கின்றன.

 

செய்வதறியாமல் விழி பிதுங்கினாலும் இந்த பயணம் முடியும் வரை இப்பருந்துகள் நம்மை ஒன்றும் செய்யமுடியாதுதான். வேறிடத்தில் தரையிரங்கி ‘வச்சு செஞ்சாலும் செய்யலாம்’. அது வரையில் இப்பருந்துகளின் காலடியே தஞ்சம் அல்லது சிறை.

 

இதற்கிடையே ரசினி , குமல், தறிமுருகன், கோமான் என அழைவது,  நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பருந்திடம் அகப்பட்ட குஞ்சு தப்பிக்க முயற்சி செய்வது போலத்தான். விழுந்து உருத்தெரியாமல் அழிந்து போவோம்.

 

ஜெ வின் நினைவில்…எழுந்த பதிவு.
மரித்துப் போன திராவிட இயக்கத்தின்  நினைவில்…எழுந்த பதிவும் கூட.

00000

2 thoughts on “பருந்தும் தமிழகமும்”

  1. நன்றாக அடைகாத்தார் அந்த அம்மையார். அடைகாத்த லட்சணம் இப்பாே து ஊருக்கே வெட்ட வெ ளிச்சமாகி விட்டது.

    Like

  2. அடை காத்ததெல்லாம் கூ முட்டைகளைத்தான்
    நம்மை போன்ற சாதரன மக்களை அல்ல.

    Like

Leave a comment