கவிஞனின் புன்னகை

கண்ணிருட்டும் நண்பகலின் கோடையனல், அணையவிருக்கும் விளக்கு சுடர்விட்டு எரிவதுபோல உடலின் சகலபாகங்களிலும் ஊடுருவி எரித்துக் கொண்டிருந்தது. சென்னையின் கோடை, நிலத்திற்கு அடியிலுள்ள கடைசிச் சொட்டு நீரையும் உண்டு ஆவியாக்காமல் அணைவதுபோல் தெரியவில்லை. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மலையாள கவிஞரான பி.ராமன்,  விருதை வழங்கவிருக்கும் கவிஞர் தேவதேவனின் "பாலைவனத்தில் பயணம் செய்வோனுக்கு கைவசமிருக்கும் நீர்க்கலமே சோலை…" என்ற கவிதையை நினைவு கூர்ந்தார். இளம் கவிஞர்களுக்காக வழங்கப்படும் 'குமரகுருபன் விஷ்ணுபுரம் விருது' விழாதான் எரிக்கும் இந்த சென்னைக் கோடையை… Continue reading கவிஞனின் புன்னகை