“யார் கடவுள்? “ என்ற கேள்விக்கு தன்னுள் (வுள்) கடந்து சென்றவன் தான் என அத்வைத (ஆதிசங்கரரின் தத்துவம்) டச் கொடுத்திருக்கிறார் கமல். தி இந்து தமிழ்ப் பத்திரிக்கையின் 5வது ஆண்டு தொடக்க விழாவில்.
அழகான, புத்திசாலியான துணை வேண்டும் என்ற இளையவர்களின் தவிப்பைப்போல; நொடித்து படுத்துவிட்ட குடும்பத்தை சுற்றத்தார் மெச்ச தூக்கி நிறுத்தும் ஒரு வாரிசு வேண்டி தவிக்கும் குடும்பத்தைப் போல; இழந்து தரையில் வீழ்த்தப்பட்டிருக்கும் தமிழனின் பெருமையை மீட்டெடுக்க ஒரு தலைமை வேண்டி தவம் கிடக்கிறது ஒட்டுமொத்த தமிழகமும்.
இதே போன்ற வெற்றிடம் உருவான போதுதான், அண்ணாதுரை அவர்கள் தான் சார்ந்த பெரியார் ஆரம்பித்திருந்த திராவிடர் இயக்கத்தை திராவிடர் கழகமாக மாற்றி ஆட்சியமைத்தார். அதன் பின் வந்த இக்கழகத் தலைவர்களால் திராவிட இயக்கம் முற்றிலும் கைவிடப்பட்டு ஒரு வெற்று இயக்கமாக, மரபும் அறியாத நவீனமும் புரியாத ஒரு உள்ளீடற்ற இயக்கமாகிப் போனது. இது தமிழர்கள் மற்றும் அவர்களை இது நாள் வரை ஆண்ட திராவிடக் கழகங்கள் பெரியாருக்கு இழைத்த மிகப்பெரிய துரோகம்.
கமலுக்கு மட்டுமல்ல, இந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள நினைக்கும் அனைத்து தலைவர்களுக்கும் இங்குள்ள சிக்கல் இதுதான். அதீத உணர்ச்சியால் தூணடப்பட்ட தொண்டர்களும் கழகங்களும் மட்டுமே இங்குள்ளன. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிக் கொள்ளக்கூடிய சிந்தனைகளையோ தத்துவங்களையோ உருவாக்கும் சிந்தனைவாதிகள் நம்மிடமில்லை. அண்ணாவிற்கு பெரியார் இருந்தார். அதற்குப்பின் பெரியாரின் சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை. அவர் வெறும் கடவுள் மறுப்பாளராகச் சுருக்கப்பட்டார். தமிழ்நாட்டில் பகுத்தறிவென்பதே கடவுள் மறுப்பென்றாகியது.
கழகங்கள் தொண்டர்கள் வந்தடையும் கூடென்றால் , இயக்கங்கள் சிந்தனைவாதிகளின் உறைவிடம். இவ்விரண்டையும் சிறப்பாக ஒருங்கிணைக்கத் தெரிந்தவனே தலைவனாக ஆட்சிக் கட்டிலில் அமரமுடியும். அண்ணாவிற்கும், கலைஞருக்கும் அத்திறமை இருந்தது. எம்ஜிஆருக்கும், ஜெவுக்கும் கூடவே கவர்ச்சியும் இருந்தது.
ஆனால் கமலுக்கோ வெறும் கவர்ச்சி மட்டுமே உள்ளது. தலைவனாகத் தன்னை நிறுவிக்கொள்வதற்கு இது மட்டுமே போதாதென்று அவருக்கும் தெரியும்.
அருகிப் போய்விட்ட சிந்தனையாளர்களையும், அதீத உணர்ச்சி கொண்ட தொண்டர்களையும் அவர் தேடிக்கணடுபிடித்து ஒருங்கிணைத்து தன்னைத் தலைவனாக நிறுவி….தலை சுற்றுகிறது கமல். All the best. நீங்கள் வெல்ல எல்லாம் வல்ல உங்களை(கடவுளை) பிரார்த்திக்கிறேன்.
[…] […]
LikeLike